games

img

விளையாட்டு...

ஒரே ஆண்டில் 2 கிராண்ட்ஸ்லாம், ஏடிபி பைனல்ஸ் கோப்பை இத்தாலியின் சின்னர் கலக்கல்

டென்னிஸ் உலகின் இளம் வீர ரும், அதிரடிக்கு பெயர் பெற்ற நட்சத்திரமுமான இத்தாலி யின் சின்னர் ஒரே ஆண்டில் ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களுடன் மதிப்பு மிக்க ஏடிபி பைனல்ஸ் கோப்பையை யும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் ஏடிபி சர்வதேச ரேங்கிங்கில் நம்பர் 1 வீரராக இந்த ஆண்டை (2024) நிறைவு செய்யும் முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையையும் சின்னர் பெற்றுள் ளார். அதே போல ஏடிபி பைனல்ஸ் கோப்பையை கையிலேந்திய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமைக்கும் சின்னர் சொந்தக்காரர் ஆனார். ஒரே ஆண்டில் ரூ.143 கோடி ஆஸ்திரேலியா, அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம், ஷாங்காய் மாஸ்டர்ஸ், ஏடிபி பைனல்ஸ் ஆகிய போட்டிகளில் பட்டம் மற்றும் பிரெஞ்சு, விம்பிள்டன் உள்ளிட்ட தொடர்களில் கிடைத்த பணம் என ஒரே ஆண்டில் இத்தாலியின் ஜானிக் சின்னர் ரூ.143  கோடி பரிசுத்தொகையை (16,946,149 அமெரிக்க டாலர்) வென்று அசத்தியுள் ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

50,000 பேர் பங்கேற்ற எத்தியோப்பியா மாரத்தான்

பொதுவாக கிமீ கணக்கில் ஓட வேண்டிய மாரத் தான் போட்டியில் அதிகப்பட்சம் 2 ஆயி ரம் பேர் பங்கேற்பார்கள். அதில் 200 பேர் மட்டுமே முழுமையாக ஓடி  போட்டியை நிறைவு செய்வார்கள். இதுதான் மாரத்தான் போட்டியின் வரலாறு. ஆனால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா வில் நடைபெற்ற சர்வதேச மாரத்தானில் (10 கி.மீ.,) 50,000 பேர் பங்கேற்ற அதிசய நிகழ்வு அரங்கேறி யுள்ளது. கென்யா மற்றும் உகாண்டா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்டோர் 10 கிமீ முழுமை யாக நிறைவு செய்தனர். ஒரே நேரத்தில் மஞ்சள் ஜெர்சியுடன் 50,000 பேர் சாலையில் ஓடியதால், அந்நாட்டின் தலைநகர் அபாபா மஞ்சள் மயமாக ஜொலித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியா மறுக்க காரணமில்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டி

அடுத்தாண்டு (2025) பாகிஸ் தான் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி என அழைக்கப்படும் மினி உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. வழக்கம் போல பாதுகாப்புப் பிரச்சனையை கார ணம் காட்டி பாகிஸ்தான் மண்ணில் நடை பெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் நடை பெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பிசிசிஐ மறுத்ததற்கு சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இருந்து இன்னும் எங்களுக்கு விளக் கத்துடன் பதில்  எதுவும் வரவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “பாகிஸ்தானுக்கு தங்கள் அணி யை அனுப்புவது பற்றி இந்தியாவுக்கு ஏதேனும் கவலை இருந்தால், அவர்கள்  எங்களுடன் பேச வேண்டும், நாங்கள் இந்தியாவின் கவலையை  நீக்குவோம். ஆனால் காரணமின்றி இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறது.  சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா, பாகிஸ்தானுக்கு வராததற்கு எந்த காரணமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் பெருமையும் மரியாதையும் எங்கள் முன்னுரிமை. அதனால் சாம்பியன்ஸ் டிராபி எங்கள் நாட்டில் மட்டுமே நடக்கும்” என கூறியுள்ளார். இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வர மறுத்தது தொடர்பாக ஐசிசி அமைதி காப்பது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புரோ கபடி 2024

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும்:  நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)

தில்லி - குஜராத்
நேரம் : இரவு 8 மணி

தெலுங்கு டைட்டன்ஸ் - மும்பை
நேரம் : இரவு 9 மணி