games

img

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் சுடர் வெளியீடு.....

பெய்ஜிங்:
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முந்தைய கொண்டாட்ட நடவடிக்கை பிப்ரவரி 4ஆம் நாள் தேசியநீச்சல் மையத்தில் நடை பெற்றது. இதில்,  2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒளிச்சுடர்களின் தோற்றம் வெளியிடப் பட்டது.

இந்த ஒளிச்சுடர்கள்  2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சுடரைப் போன்றே வடிவமைக்கப் பட்டுள்ளன.பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒளிச்சுடரானது கரிம நாரால் தயாரிக்கப்படவுள்ளது. இதனால், இத்தீபம் எடை குறைவாக இருப்பதோடு, உறுதியாக வும், அழகாகவும் இருக்கும் என்று கரிம நார் நிபுணரும் சைனோபெக் நிறுவனத்தின் ஷாங்ஹாய் கிளை நிறு வனத்தின் துணைத் தலைவருமான ஹுவாங் சியாங்யு தெரிவித்துள்ளார்.