games

img

ஒரே நாளில் 2 தங்கம் நார்வே, சுவிஸ் அசத்தல்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் 24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் நார்வே 11-வது நாளான செவ்வாயன்று ஒரே நாளில் 2 தங்கம் (பையத்லான்,பர்ஷீட் ஆகிய பிரிவுகளில்), ஒரு வெள்ளி (ஸ்னோபோர்ட்) என 3 பதக்கம் வென்று அசத்தியுள்ளது. நார்வே வென்றுள்ள 3 பதக்கமும் ஆடவர் பிரிவில் வென்றதாகும்.  சுவிட்சர்லாந்து நாடு இரண்டு தங்கப்பதக்கம் (ப்ரீஸ்டைல் ஸ்கியிங் மற்றும் அல்பின்  ஸ்கியிங்) வென்று அசத்தியுள்ளது. கனடா, சீனா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் தங்கப்பதக்கம் பெற்று பதக்கப்பட்டியல் வரிசையில் முன்னிலை பெற்றது.

பதக்கப்பட்டியல் 
நாடுகள்                   தங்கம்        வெள்ளி       வெண்கலம்    மொத்தம்
நார்வே                           11                     6                       7                   24
ஜெர்மனி                        8                      5                       2                   15
அமெரிக்கா                   7                       6                      4                    17    
ஆஸ்திரியா                   6                       6                      4                    16    
நெதர்லாந்து                 6                       4                       3                    13

இன்றைய ஆட்டங்கள் 
பெங்கால் - தமிழ்நாடு (இரவு 7:30) 
தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் (இரவு 8:30)

இரண்டு ஆட்டங்களும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறுகிறது.