ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2024
பட்டம் வெல்வது யார்?
மெத்வதேவ் - சின்னர் இன்று பலப்பரீட்சை
112 ஆண்டுகால பழமையான டென்னிஸ் தொ டரான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னரை எதிர்கொள்கிறார்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் (ஒட்டுமொத்தமாக) இத்தாலியின் சின்னரும், 3 முறை ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்ட மெத்வதேவும் முதன்முறையாக ஆஸ்திரேலிய கிராண்டஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் என இரு வீரர்களும் சாம்பியன் பட்டத்தின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெத்வதேவ் கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் (ஒட்டுமொத்தத்தில் முதன்முறையாக) பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு வாய்ப்பு?
அரையிறுதியில் சூப்பர் பார்மில் உள்ள முதல்நிலை வீரரும், டென்னிஸ் உலகின் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான ஜோகோவிச்சை அரையிறு தியில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய இத்தாலி யின் சின்னருக்கு பட்டம் வெல்ல சகல வாய்ப்புகள் உள்ளன. அதே போல கடந்த 5 வரு டங்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெத்வ தேவும் நடப்பு சீசனில் கோப்பை வெல்வார் என எதிர்பார்க்கப்படுவதால் யாருக்கு கோப்பை என திடமாக ஆருடம் கூட கூற முடியாது.
பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் : ரூ.17 கோடி (கோப்பையுடன்)
2-ஆம் இடம் : ரூ.9 கோடி (கோப்பையுடன்)
அரையிறுதி தோல்வி : ரூ.5 கோடி (தலா 2 பேருக்கு)
காலிறுதி தோல்வி : ரூ.3 கோடி (தலா 4 பெருக்கு)
சுற்று ஆட்டங்களிலும் வெளியேறியவர்களுக்கும் கணிசமான பரிசுத்தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(பரிசுத்தொகை : ஆடவர், ஒற்றையர் பிரிவுக்கு மட்டும். இரட்டையர் பிரிவுக்கு பரிசுத்தொகை மாறுபடும்)