இன்று போட்டிகள் கிடையாது. புதனன்று நடைபெற்ற பெர்முடா பார்ட்டி நிகழ்வால் (நள்ளிரவு வரை பார்ட்டி நடைபெற்றதால்) இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் சென்னை - மாமல்லபுரம், ஃபோர் பாயிண்ட் ஷெரட்டன் ரிசார்ட்டிற்கு செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு (செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர்) சென்னையிலிருந்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதி, உணவு என தனி ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கலைவாணர் அரங்கத்திலிருந்து முற்பகல் 11.00 மணிக்கும், டிடிடிசி (தமிழ்நாடு சுற்றுலாத்துறை) மாமல்லபுரத்திலிருந்து பிற்பகல் 01.00 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கு கலைவாணர் மார்க்க பேருந்தில் மதிய உணவும், டிடிடிசி மாமல்லபுரம் மார்க்க பேருந்தில் இரவு உணவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை ஜோர்...
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. எந்தவகை டிக்கெட் கிடைத்தாலும் பரவாயில்லை போட்டியை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட்டு விரும்பிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். 8-வது நாளின் முடிவில் 3,700-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிக்கெட் வருமானம் ரூ. 40 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விடவும் சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர் டிக்கெட் விற்பனையில் அதிக வருமானம் ஈட்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவர் பிரபுல் ஸவேரி தகவல் அளித்துள்ளார்.