games

img

மகளிர் உலகக் கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 203 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மேடி க்ரீன் மட்டும் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்தார். 

இதனைத் தொடர்ந்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஹீத்தர் நைட் மற்றும் நடாலியா சிவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிவர் அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்தார். 196 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, டீன் மற்றும் ஷ்ரப்சோலின்  பொறுப்பான விளையாட்டின் காரணமாக வெற்றியை உறுதி செய்தது. இறுதியில், 47.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 204 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.