games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் இன்னும் 3 நாட்கள்

மைதானங்கள் ஒரு பார்வை

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கியமானதாக இருப்பது விளையாட வீரர்கள், கேப்டன்கள், அணியின் பலம், பார்ம் ஆகியவை ஆகும். கிரிக்கெட் மைதானங்கள் பற்றி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆஸ்திரேலிய நாட்டில் கிரிக்கெட் தொடர் என்றால் எந்தெந்த மைதானம் என்று தான் முதலில் கேள்விகள் வெளியாகும். அந்தளவுக்கு ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு மிரட்டல் கிளைமேக்ஸ் உள்ளது. தற்போது 8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மைதானங்கள் பற்றிய சிறிய ரிப்போர்ட்

மெல்போர்ன் : பேட்டிங், பந்துவீச்சு சரிசமமாக ஈடுபடும். உயிரோட்டமான ஆடுகளம் என்பதால் பவுன்சர் அதிகமாக எகிறும்.
சிட்னி : பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். பந்துவீச்சு சரிசமமாக ஈடுபடும்

ஹோபர்ட் : பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்

பிரிஸ்பேன் : பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். பவுன்சர் அளவுக்கு அதிகமாகவும், மிரட்டல் வேகத்தில் எகிறும்.

அடிலெய்டு : இது சற்று மாறுபட்ட ஆடுகளம். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்று கூறப்பட்டாலும் திடீரென ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறும். அதாவது இரண்டாவது பேட்டிங் பந்துவீச்சு சாதகமாக மாற வாய்ப்புள்ளது.  

பெர்த் : உலக சிறப்பு வாய்ந்த பெர்த் மைதானம் டெஸ்ட் போட்டிக்கானது ஆகும். ஒருநாள் போட்டி ஓரளவு சிறப்பாக நடத்தலாம். ஆனால் டி-20 சற்று கவனமாக தான் இருக்க வேண்டும். வேகத்துடன் பந்தும், அதே வேகத்தில் பவுன்சரும் எகிறும். பேட்டிங் செய்வது கடினமான காரியம். தாறுமாறாக பவுன்சர் எகிறும் என்பதால் கவனமாக பந்தை எதிர்கொள்ளவேண்டும். அசந்தால் மருத்துவமனை தான்.

சிமோன்ட்ஸ் மைதானம், கீலாங் : கால்பந்து மைதானத்திலிருந்து கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டுள்ள சிமோன்ட்ஸ் மைதானத்தை பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. காரணம் ஒரே ஒரு 
சர்வதேச ஆட்டமும் (?), பிக் பேஷ் டி-20 லீக் ஆட்டங்கள்மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புரியும்படி சொன்னால் இது சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதிய 
வரவு. சர்வதேச அனுபவம் கிடையாது என்பதால் தகுதி சுற்று ஆட்டங்கள் மட்டும் சிமோன்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.