22-வது உலகக்கோப்பை கால் பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங் கள் தற்போது நடைபெற்று வரும் நிலை யில், மார்ச் மாதம் 24-ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில் ரஷ்யா - போலந்து ஆகிய அணிகள் மோதுவ தாக அட்டவணை ஏற்கெனவே தயாரிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை காரணம் காட்டி ரஷ்யா வுக்கு எதிரான தகுதி சுற்று ஆட்டத்தில் நாங்கள் விளையாட மாட்டோம் என போலந்து அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டமும் மாற்றம்
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டம் வரும் மே 28-ஆம் தேதி ரஷ்யா வில் நடைபெறவிருந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் என ஐரோப் பிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள் ளது என்பது குறிப்பிடத்தக்து.
இந்தியா - இலங்கை (3-வது டி-20 ஆட்டம்)
நேரம் : இரவு 7:00
இடம் : தரம்சாலா, ஹிமாச்சல்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (வரிசைகள்), ஹாட் ஸ்டார்