டெஸ்ட், ஒருநாள் என 2 போட்டி களை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை (பார்டர் - காவஸ்கர் டிராபி) 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. தாயார் உடல்நிலை காரணமாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் விலகிய நிலையில், தாயார் மரணத்தால் ஒருநாள் தொடரிலும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் தனது தனிநபர் வியூகத்தால் இந்திய அணியை கதி கலங்க வைத்த ஸ்மித், ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டம்
உத்தரப்பிரதேசம்- பெங்களூரு
நேரம்: இரவு 7:30 மணி
இடம் : பாட்டில் மைதானம், நவிமும்பை
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா ஓடிடி (இலவசம்)