games

img

விளையாட்டு...

மும்பை இந்தியா - ஆஸ்திரேலியா  ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

டெஸ்ட், ஒருநாள் என 2 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை (பார்டர் - காவஸ்கர் டிராபி) 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளியன்று தொடங்கு கிறது.  டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆஸ்திரே லிய அணியும், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை வெறுங்கையோடு அனுப்பும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றி யின் மீது குறியாக களமிறங்குவதால் ஒருநாள் தொடர் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா 
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : மதியம் 1:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட்ஸ்டார் 
(சந்தா செலுத்தினால் மட்டும் ஸ்மார்ட் போனில் பார்க்கலாம்) 

தில்லி கேப்டன் - வார்னர்

ஐபிஎல்

இன்னும் 14 நாட்கள்

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் வரும் 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தில்லி அணி கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்டருமான டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த இந்திய வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருவதால் நடப்பு சீசனில் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் அணி ஜெர்சி

ஐபிஎல் தொடரின் முன்னாள் சாம்பியனான (2016) சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. சன் குழுமத்தின் சொந்த மான அணியான ஹைதரா பாத் அணியை நடப்பு சீசனில் மார்க்ராம் (தென்  ஆப்பிரிக்கா) வழிநடத்து கிறார். மேலும் இந்த அணியில்தான் காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் உம்ரான் மாலிக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் அரையிறுதியில் போபண்ணா ஜோடி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி தனது காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பெலிக்ஸ் - சபலாவ் ஜோடியை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சபலென்கா மிரட்டல் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், பெலாரஸ் நட்சத்திரமுமான சபலென்கா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கவுஃபை புரட்டியெடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கிரீஸின் சக்கரி 6-4, 7-5, 6-1 என்ற செட்  கணக்கில், செக்குடியரசின் பிளிஸ்கோவாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  மெத்வதேவ் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் முன்னணி அதி ரடி வீரரும், உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருப்பவருமான ரஷ்யாவின் மெத்வதேவ், ஸ்பெயின் நாட்டின் போகினாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
 

 

;