games

img

விளையாட்டு...

மாட்ரிட் டென்னிஸ் : சபலென்கா சாம்பியன்'

ஸ்பெயின் நாட்டின் முக்கிய டென்னிஸ் தொடரான மாட்ரிட் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரருமான அல்காரஸ் தரவரிசையில் இல்லாத ஜெர்மனி வீரர் ஸ்ட்ராப்பை எதிர்கொண்டார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அல்காரஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்ட்ராப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

ஐபிஎல் 2023

அனுபவம் இல்லாத வீரரை கேப்டனாக களமிறக்கி அடிமேல் அடி வாங்கும் லக்னோ

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே நன்றாக விளையாடி வரும் லக்னோ அணி யில் கடந்த வாரம் கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக வெளியேறி னார். அவருக்கு பதிலாக க்ருனால் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். போதிய அளவு அனுபவம் இல்லாததால் க்ருனால் பாண்டியா அணியை சமாளிக்க முடி யாமல் மிக மோசமாக திணறி வரு கிறார். க்ருனால் பாண்டியா கேப்ட னாக பதவியேற்ற பின்பு தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை எதிர்கொண்டது லக்னோ.  இவர்கள் இருக்கும் பொழுது க்ருனால் பாண்டியா ஏன்? லக்னோ அணியில் தென் ஆப்பிரிக்கா தேசிய அணியின் கேப்டன்  குவின்டன் டி காக், மேற்கு இந்தியத் தீவு கள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன், ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இருக்கும் பொழுது கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லாத க்ருனால் பாண்டியாவை களமிறக்கி  அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது லக்னோ அணி. இந்த வேலைக்கு கார ணம் லக்னோ அணியின் ஆலோசகரும், பாஜக எம்பியுமான கம்பீர்தான் என சந்தேகிக்கப்படுகிறது. கேப்டன் பத விக்கு வெளிநாட்டவர் வேண்டாம், இந்தியர் போதும் என்ற எண்ணத்தில்  க்ருனால் பாண்டியாவை களமிறக்கி இருக்கலாம்.

3-ஆம் நடுவர் தாமதம் ஏன்?

ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் இல்லாதது போல எல்.பி.டபிள்யு, கேட்ச், ரன்அவுட் போன்ற ரீவியூ செய்தால் 2 நிமிடம் ஆகிறது. முன்பெல்லாம் வெறும் 40 நொடியில் அறிவித்து விடுவார்கள்.ஆனால் நடப்பு சீசனில்தான் இவ்வளவு நேரம் ஆகிறது. தொழிநுட்ப கோளாறா? இல்லை நடுவர்களின் அசமந்தமா? என தெளிவாக ஏதும் புரியவில்லை.

இன்றைய ஆட்டம்

பெங்களூரு - மும்பை
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)