games

img

விளையாட்டு...

சண்டே ஸ்பெசல்

லக்னோ, மும்பை அணிகளின் ஜெர்சியில் திடீர் “காவி”
கிரிக்கெட்டிலும் “காவி” அரசியல் முன்னோட்டமா?

விளையாட்டு உலகில் ஜெர்சி தயாரிப்பு என்பது மிக முக்கியமானது. வண்ணம், டிசைன் வடிவமைப்பு, ஜெர்சி ஸ்டைல், லோகோ உருவாக்கம் என பல்வேறு சிக்கலான, கடினமான செயல்பாடுகள் உள்ளது. ஒரு அணிக்கு ஜெர்சி உருவாக்க ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகலாம். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அணிகளின் ஜெர்சியும் இதே சிக்கலில்தான் வடிவமைக்கப்படுகிறது. அணி உரிமையாளர்களின் விருப்பம் அல்லது மாநிலங்களின் தனிப்பட்ட வண்ணம், அணி உரிமையாளர்களின் நிறுவன லோகோ வண்ணம் சார்பு என பல்வேறு கிளைமேக்ஸ்களுடன் ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 16-வது ஐபிஎல் சீசனில் திடீரென அரசியல் சார்பு அடிப்படையில் லக்னோ, மும்பை அணிகளின் ஜெர்சி திடீர் “காவி” வண்ணத்திற்கு மாறியுள்ளது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை

மும்பை அணி கடந்த காலகட்டங்களில் ஊதா கலர்களில் ஜெர்சியும், உள்புறத்தில் சில்வர் வண்ணத்தில் டிசைனும் பொறிக் கப்பட்டிருந்தது. தற்போதைய சீசனில் கூட அதே ஊதா வண்ணத்துடன், பக்கவாட்டில் தனிப்பட்ட சில்வர் வண்ண டிசைன் இல்லாமல் மஞ்சள் கலந்த வரி போன்ற அமைப்புடன் களமிறங்கியது. ஆனால் என்னவென்று தெரியவில்லை திடீரென தனது 4-வது (தோராயமாக) லீக் ஆட்டத்தின் பொழுது பக்கவாட்டு டிசைனை “காவி” வண்ணத்தில் மாற்றியது.

                சந்தேக காரணம் 

மும்பை அணி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான அம்பானியின் அணியா கும். மோடி - அம்பானியின் நெருக்க நிகழ்வால் திடீர் பாஜகவின் கொடியான “காவி” வண்ணத்தில் மாறி இருக்கலாம்.

லக்னோ

லக்னோ அணி கடந்த சீசனிலேயே காவி வண்ணத்தை லேசாக வைத்திருந்தது. வெளிர் பச்சையில்  “காவி”சரியாக தெரிய வில்லை. நடப்பு சீசனில் அடர் ஊதா வண்ணத்திற்கு மாறி இடையில் “காவி” வண்ணத்தை அதிகளவில் சேர்த்துக் கொண்டது லக்னோ அணி. புரியும்படி சொன்னால் “காவி” வண்ணம் தெரிவதற்காகவே அடர் ஊதா வண்ணத்திற்கு ஜெர்சியை மாற்றப் பட்டுள்ளது.

                    சந்தேக காரணம்

பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ அணியின் உரிமையாளர் ஆவார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகர் முன்னாள் இந்திய வீரரும், பாஜக எம்பியுமான கம்பீர் உள்ளார். இப்படி ஒரு கூட்டணி இருந்தால் எப்படி “காவி” நிறம் ஜெர்சிக்குள் நுழையாமல் இருக்கும் என்பதை மேற்கொண்டு விளக்கம் அளிக்க தேவையில்லை.

மற்ற அணிகளின் ஜெர்சியும், காரணமும்:

சென்னை : மஞ்சள், ஊதா - இந்தியா சிமெண்ட்ஸ் லோகோ டிசைனிங் படி, தோள்பட்டையில் ராணுவ டிசைன் (தோனிக்கு பிடித்தமையால்)
ஹைதராபாத் : ஆரஞ்சு, கருப்பு - சன் குழுமத்தின் லோகோ, சன்டிவியில் எண்ட்ரன்ஸ் படி, 
பெங்களூரு : அடர் ஊதா, சிவப்பு - யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன மதுபான தயாரிப்பு டிசைன்
பஞ்சாப் : சிவப்பு , கோல்டன் வண்ணம் - கடந்த டிசைன் (கிளைமேக்ஸ் எதுவும் கிடையாது)
கொல்கத்தா : அடர் பர்ப்பிள், மஞ்சள் -  கடந்த டிசைன் (கிளைமேக்ஸ் எதுவும் கிடையாது), கடந்த காலங்களில் கருப்பு நிற ஜெர்சி -                          கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இரவு காவலர்கள் - கூர்க்கா)
ராஜஸ்தான் : இளஞ்சிவப்பு, ஊதா - ராஜஸ்தான் மாநிலத்தின் வண்ணம் (இளஞ்சிவப்பு)
தில்லி : சிவப்பு, ஊதா - ஜேஎஸ்டபிள்யு (உரிமையாளர்) லோகோவின் படி

தப்பித்த குஜராத்

பாஜகவின் அரசியல் கிளைமேக்ஸ் உள்ள மாநிலமான குஜராத் அணியிலும் ஜெய் ஷா தொடர்பு இருப்பதாக கூறப்பட்டாலும் உண்மை நிலவரப்படி அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காரணம் குஜராத் அணியின் உரிமையாளர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால்தான் பிசிசிஐ செயலாளர் அமித் ஷா குஜராத் அணியிடம் “காவி” கிளைமேக்ஸை அரங்கேற்ற முடியவில்லை என நம்பப்படுகிறது. குஜராத் அணியின் ஜெர்சி கடந்த சீசனில் கருப்பு வண்ணத்தில் இருந்த நிலையில், நடப்பு சீசனில் அடர் ஊதா வண்ணத்திற்கு மாறியுள்ளது. டிசைன்களில் மாற்றம் இல்லை.

எல்லாம் அமித் ஷா மகனின் வேலை

மும்பை, லக்னோ அணிகளின் “காவி” வண்ண கலப்பு ஜெர்சி விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனும், பிசிசிஐ செய லாளருமான ஜெய் ஷாவின் தொடர்பு இல்லாமல் அரங்கேற வாய்ப்பில்லை. ஜெய் ஷா மும்பை அணியில் நேரடி தலையீடு இல்லாமல் இருந்தா லும், லக்னோ அணியில் பாஜக எம்பி கம்பீர் உடன் இணைந்து அந்த அணியின் மறைமுக மேற்பார்வையாளராக உள்ளார் (புகைப்பட ஆதாரம்).