games

img

கிரிக்கெட் உலகில் மன்கட்டிங் தேவைதானா?

கிரிக்கெட் உலகில் தற்போது மிகவும் சர்ச்சை பொருளாக இருப்பது மன்கட்டிங் எனப்படும் ரன் அவுட் முறையாகும். பந்துவீசாமல், பேட்டை சுழற்றாமல், பீல்டர் இல்லாமல், பேட்டிங் ஆர்டர் இடத்தில் இல்லாத எதிர்முனையில் இருக்கும் நான் ஸ்ட்ரைக் (NON- STRIKE) பேட்டரை ரன் அவுட் செய்வதே மன்கட்டிங் முறையாகும்.  இந்த முறை தேவைதானா? என்ற கருத்து ஏற்கெனவே கிரிக்கெட் உலகில் வட்டமடித்து வந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டியின் பொழுது மன்கட்டிங் விவகாரம் மீண்டும் அரங்கேற வெடித்தது சர்ச்சை. இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, இங்கிலாந்து வீராங்கனை சார்லியை மன்கட்டிங் மூலம் ரன் அவுட் செய்தார். ஐசிசி-யின் புதிய விதிப்படி நடுவருக்கு அவுட் கொடுத்தார். இந்திய வீராங்கனையின் மன்கட்டிங் செயல்பட்டால் எரிமலையிலிருந்து வெளியேறும் “லாவா”வைப் போன்று பொங்கினர். மேலும் சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் அரங்கேறிய நிலையில், ஒருதரப்பினர் மன்கட்டிங் முறைக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

உண்மையில் மன்கட்டிங் தேவையா?

கிரிக்கெட் விளையாட்டு என்பது ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்றது. களத்தில் நீயா? நானா? என மோதிக்கொள்வது. மல்யுத்தம் போன்று மல்லுக்கட்டும் வேலை மட்டும்தான் அங்கு இல்லை. சண்டை, வாக்கு வாதம், பந்தை வைத்து பேட்டரை  பவுலிங் மூலம்   தாக்குதல் என பல்வேறு  அம்சங்கள் கொண்டது கிரிக்கெட் உலகம். ஆனால் பந்தே வீசாமல், பேட்டிங் செய்யாமல், பேட்டிங் ஆர்டர் களத்தில் இறங்காத அப்பாவி போல இருக்கும் நான் ஸ்ட்ரைக் பேட்டரை  ரன் அவுட் செய்வது எந்த விதத்தில் நியாயம். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நபரையும் வீரர் - வீராங்கனைகள் என்று கம்பீரமாக அழைக்கிறோம். அந்த சொல்லுக்கு ஏற்ப பந்தை வீசி பேட்டரை வீழ்த்துவதே வீரம் என்ற  சொல்லுக்கு அர்த்தமாகும். ஆனால் எதுவுமே செய்யாமல் புத்திசாலி, தெளிவான செயல் என்ற பெயரில் மன்கட்டிங் என்ற முறையில் கோழைத்தனமாக வீழ்த்துவது மிகவும் மோச மான செயல் ஆகும். தற்போதே இதற்கு முடிவு கட்டுவது நல்லது. வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்களால் கிரிக்கெட் உலகில் பல்வேறு சண்டை, சச்சரவுகள் உருவாக வாய்ப்புள்ளது. முக்கியமாக மன்கட்டிங் முறை ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் போன்று இருப்பதால் சில சமயங்களில் வாக்குவாதம், கைகலப்பு உருவாகவும் வாய்ப்புள்ளது.

மன்கட்டிங் என்றால் என்ன?

பந்துவீசும் போது பகுதியில் நிற்கும் எதிர் பேட்டர் பந்துவீசும் சமயத்தில் கிரீஸ் (பந்துவீச்சு பகுதி கோடு) பகுதியை விட்டு வெளிய சென்றால், பந்து வீசும் முன்னரே ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்வதே மன்கட்டிங் (MANKADING) ஆகும். 

எம்சிசி கூறுவது என்ன?

கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேர்லிபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) மன்கட்டிங் குறித்து அளித்த விளக்கத்தில்,”மன்கட் முறை அவுட், ரன் அவுட் விதி 38-க்கு மாற்றப்பட்டுள்ளது. நான் ஸ்ட்ரைக் பேட்டா்கள் கிரீஸை விட்டு செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். இது நான் ஸ்ட்ரைக் முக்கியமான பொறுப்பாகும். பந்துவீச்சாளர் கையிலிருந்து பந்து ரிலீஸ் ஆவதற்குள் பேட்டர்கள் கிரீஸை விட்டு அகலக்கூடாது. இதுதொடர்பான விதி மிகவும் தெளிவாக உள்ளது. பேட்டா்கள் பொறுப்புடன் செயல்பட்டால், மன்கட்டிங் விக்கெட்டுகள் ஏற்படாது” எனக் கூறியுள்ளது.

மன்கட்டிங் முறைக்கு  ஏற்படும் விளைவுகள்...

டெஸ்ட் : மன்கட்டிங் நடைபெற வாய்ப்பு இல்லை. மந்தமாக ரன் குவிப்பதால் டெஸ்ட் போட்டிகளில் 90% வாய்ப்பு இல்லை.  அப்படியே நடைபெற்றாலும் சச்சரவு இல்லாமல் முடிந்துவிடும். ஒருநாள் : மிதமான வேகத்தில் ரன் குவிப்பு செய்யப்படுவ தால் 50% மோதல் ஏற்படும். கடைசி 10 ஓவர் அல்லது 2-வது பேட்டிங் என்றால் வாக்குவாதம் ஏற்படும். டி-20 : துரித வேகத்தில் ரன் குவிக்கப்படுவதால், மிகப்பெரிய  மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருமுறை மன்கட்டிங் செய்யப்பட்டால் அந்த அணியோ அல்லது வீரரோ எதிரியை போல எதிரணியினர் சித்தரித்துவிடுவார்கள்.