மும்பை
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 16-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை நகரில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. புதிதாக ஐபிஎல் தொடரில் நுழைந்துள்ள குஜராத் அணி தான் பங்கேற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றி நடைக்கு பஞ்சாப் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2-இல் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் - குஜராத்
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்