கிரிக்கெட்டில் இன்று மல்யுத்தம்
இந்தியா - பாகிஸ்தான் மோதலால் களைகட்டும் கிரிக்கெட் உலகம்
கிரிக்கெட் உலகில் எந்த போட்டி யாக இருந்தாலும் இந்தியா - பாகிஸ் தான் ஆட்டத்திற்கு தனி கிராக்கி உள்ளது. காரணம் எல்லை பிரச்சனை, இதர அரசியல் பிரச்சனைகளால் இந்திய அரசாங்கம் - பாகிஸ்தான் அர சாங்கத்தின் மோதல் போக்கு கிரிக்கெட் விளையாட்டிலும் எதிரொலித்து வருவ தால், இந்தியா - பாகிஸ்தான் விளையா டும் ஆட்டங்களுக்கு மட்டும் தனி மவுசு உள்ளது. இதனால் எந்த தொடராக இருந் தாலும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங் கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், 8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரின் 4-வது “சூப்பர் 12” சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் மோதுகின்றன. விடு முறை நாளான ஞாயிறன்று நடைபெ றும் இந்த ஆட்டம் பாரம்பரியமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த கால வரலாறு, நடப்பு கால இருநாட்டு அரசியல் நிலைமை என பல் வேறு விருப்பு, வெறுப்பு இருப்பதால் இந்த போட்டி ஒரு “விளையாட்டு தேர்தல்” போன்று உள்ளது. கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என இரு அணி களும் களமிறங்குவதால் இந்தியா - பாகிஸ்தான் டி-20 ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
இலங்கை - அயர்லாந்து
நேரம் : காலை 9 :30 மணி
இந்தியா - பாகிஸ்தான்
நேரம் : மதியம் 1 :30 மணி
யாருக்கு வாய்ப்பு?
இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி, தோல்வி என திடமாக கருத்து கூற முடியாது. காரணம் பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் என 3 பிரிவுகளில் இரு அணிகளும் சரிசம பலத்தில் உள்ளது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் அணியின் பலம், பலவீனம் தொடர்பான ஆய்வுகளின் படி எந்த அணிக்கு சற்று வெற்றி வாய்ப்பு உள்ளது என குறைந்தபட்சம் 50% கணிக்கலாம்.
இந்தியா
பலம்
ஆடும் லெவனுக்கு 7 முதல் 9 பேர் வரை பேட்டிங் பலம் உள்ளது. வேகம், சுழல் கலந்து 9 பந்துவீச்சாளர்கள் கைவசம் இருப்பதால் உயிரோட்டமான ஆடுகளங்களில் சற்று வித்தியாசமான பந்துவீச்சை இந்திய அணி வெளிப்படுத்த காத்திருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் குடைச்சல் ஏற்படும். பீல்டிங்கில் எவ்வித பிரச்சனையும் இல்லை.
பலவீனம்
கேப்டன் ரோஹித் உத்தரவு பிறப்பிப்பதில் சற்று கோவமாக செயல்படுகிறார். இது இளம் வீரர்களுக்கு சோர்வை உருவாக்கும். பேட்டிங்கில் சூர்ய குமார், தினேஷ் கார்த்திக் மட்டுமே நல்ல பார்மில் உள்ளனர். கோலி, ரோஹித் வெகு சீக்கிரமாக பெவிலியன் செல்ல ஆசைப்படுபவர்களாக இருப்பதால் பேட்டிங்கில் திணறல் ஏற்படும். தினேஷ் கார்த்திக் பார்மில் இருந்தாலும் ஆடும் லெவனில் களமிறக்குவது போன்ற சிக்கலான சூழல் உள்ளது. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்றார் போல ஷமி மட்டுமே உள்ளார். மற்ற பந்துவீச்சாளர்கள் பற்றி எதுவும் கூற முடியாது. ஹர்ஷல் படேலை களமிறக்கினால் இந்திய அணிக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோக பார்ம் பிரச்சனை வேறு தலைவிரித்தாடுகிறது. மொத்தத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் எப்படி பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
பாகிஸ்தான்
பலம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பக்குவத்தை போன்று அமைதியாகவும், திடமாகவும், பதற்றமில்லாமல் கேப்டன் பொறுப்பை பாபர் அசாம் கவனிப்பது பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான பிளஸ் பாயிண்ட் ஆகும். பேட்டிங்கில் அதிகபட்சம் 9 பேர் வரை கூட ஆடும் லெவனில் (ஆல்ரவுண்டர் சேர்த்து) களமிறக்கும் வாய்ப்பு இருப்பதால் பேட்டிங் பற்றி குறை கூற எதுவும் கிடையாது. முக்கியமாக பாகிஸ்தான் அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் பெரும்பாலானோர் 140 கிமீ பந்துவீசுபவர்களாக இருக்கின்றனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் உயிரோட்டமானது என்பதால் இது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும். இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால் பீல்டிங்கில் ஒன்றும் பிரச்சனை கிடையாது.
பலவீனம்
பல சிறப்புள்ள வீரர்கள் இருந்தாலும் பார்ம் பிரச்சனை பெரிய தலைவலி தான். பேட்டிங்கில் ஒரு வீரர் ஆட்டமிழந்தால் பதற்ற உணர்வுடன் பின்வரும் வீரர்கள் சீட்டுக்கட்டாய் சரிவது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பாகிஸ்தான் அணி இதுவரை உணராமல் இருப்பது. முக்கியமாக அணியில் ஒற்றுமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் என அனைத்து பிரிவுகளிலும் பல முக்கியமான வீரர்கள் இருப்பதால் ஆடும் லெவன் தேர்வு சற்று சிக்கலான விஷயங்களை ஏற்படுத்தும்.
மழை வருமா?
நட்சத்திர ஆட்டமான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் இடமான மெல்போர்னில் 75% மழை வர வாய்ப்புள்ளது. இதனால் ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் மழை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை - அயர்லாந்து ஆட்டம் நடைபெறும் ஆட்டமும் (ஹோபர்ட்)மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.