இந்தியாவில் நடைபெறவுள்ள 13-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் (50 ஓவர் - ஒருநாள்) வியாழனன்று தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வியாழனன்று (அக்., 05) தொடங்கி, நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 மைதானங்களில் 48 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தியா முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை தனியாக நடத்துகிறது. ஏற்கெனவே 4 முறை உலகக்கோப்பை நடத்தினாலும் தனியாக இந்தியா நடத்தியதில்லை. 1987 உலகக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிலும், 1996 உலகக்கோப்பை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளிலும், 2011 உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்கதேசம் நாடுகளிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க ஆட்டம்
இங்கிலாந்து-நியூஸிலாந்து
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
மழை : வாய்ப்பில்லை.
ஆட்டம் சிக்கலின்றி நடக்கும்
சுற்று எப்படி?
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.அதன்பிறகு இறுதி ஆட்டம்.
சேனல் ஹாட் ஸ்டார் இலவசம்
இந்தியாவில் உலகக்கோப்பை தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகளில் காணலாம். அதே போல ஹாட்ஸ்டார் ஒடிடி-யில் ஸ்மார்ட்போனில் இலவசமாக காணலாம். ஆனால் ஸ்மார்ட் டிவிகளில் ஹாட்ஸ்டார் மூலமாக சந்தா இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். மற்ற நாடுகளில் வேறு தொலைக்காட்சி மற்றும் ஒடிடி நிறுவனங்கள் ஒளிபரப்பப்படுகிறது.
மைதானங்கள்
1. எம்சி சிதம்பரம் மைதானம், சென்னை (தமிழ்நாடு)
(50,000 பேர் அமரலாம், 5 போட்டிகள்)
2. வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா
(32,000 பேர் அமரலாம், 5 போட்டிகள் - அரையிறுதி)
3. சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
(40,000 பேர் அமரலாம், 5 போட்டிகள்)
4. அகமதாபாத் மைதானம், குஜராத் (1,32,000 பேர் அமரலாம், 5 போட்டிகள் -தொடக்க ஆட்டம், இறுதி ஆட்டம்)
5. ஈடன் கார்டன், கொல்கத்தா, மேற்கு வங்கம்
(66,000 பேர் அமரலாம், 5 போட்டிகள் - அரையிறுதி)
6. புனே மைதானம், மகாராஷ்டிரா
(37,406 பேர் அமரலாம், 5 போட்டிகள்)
7. ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
(55,000 பேர் அமரலாம், 3 போட்டிகள்)
8. தில்லி மைதானம்
(41,842 பேர் அமரலாம், 5 போட்டிகள்)
9. தரம்சாலா மைதானம், இமாச்சலப்பிரதேசம்
( 23,000 பேர் அமரலாம், 5 போட்டிகள்)
10. ஏக்நா மைதானம், லக்னோ, உத்தரப்பிரதேசம்
(50,000 பேர் அமரலாம், 5 போட்டிகள்)
83 கோடி பரிசுத்தொகை
13-வது சீசன் உலகக்கோப்பைக்கு மொத்தம் ரூ.83 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. சாம்பியன் - ரூ.33 கோடி; 2-ஆம் இடம் - ரூ.16 கோடி; அரையிறுதி தோல்வி - ரூ. 6 கோடி
லீக் சுற்று வெளியேற்றம் - ரூ. 33 லட்சம்தகுதிச் சுற்றில் வெளியேறிய அணிகளுக்கும் குறிப்பிட்ட பரிசுத்தொகை உள்ளது.