திங்கள், செப்டம்பர் 27, 2021

games

img

ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் மிதாலி ராஜுடன் இணைந்த லிசெல் லீ 

பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 91 ரன்கள் குவித்ததன் மூலமாக தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை லிசெல் லீ 762 புள்ளிகளுடன் மிதாலி ராஜூடன் இணைந்து நம்பர் ஒன் இடத்தை பகிர்ந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 756 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்திய வீராங்கனை மந்தனா 701 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் தொடருகின்றனர். லிசெல் லீ 3வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;