இங்கிலாந்து அணியின் பயிற்சி யாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார். இவர் பயிற்சியா ளர் ஆன பின் ஒருநாள், டி-20 போட்டி யில் உள்ள அதிரடி உத்தியை டெஸ்ட் போட்டியிலும் கொண்டு வந்தார். அதாவது வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து, ஒரு ஓவருக்கு சராசரியாக 4.65 ரன் வீதம் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே இந்த புதிய உத்தி யாகும். இதற்கு பாஸ் பால் (Baz ball) என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த “பாஸ் பால்” உத்தி மூலம் இங்கி லாந்து அணி தொடர் வெற்றியை குவித்து வருகிறது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மைதா னங்களில் “பாஸ் பால்” உத்தி சாதகத்தை ஏற்படுத்தியதால், இங்கிலாந்து அணி தற் போதைய இந்திய சுற்றுப்பயணத்திலும் “பாஸ் பால்” அணுகுமுறையை கையி லெடுத்துள்ளது.
இந்திய மண்ணில் பலிக்காது
இந்திய அணியின் மைதான நிலைமை வேறு. மந்தமான உயி ரோட்டம் கொண்ட இந்திய மைதானங்க ளில் பேட்டிங், பந்துவீச்சு சரிசமமான அளவில் ஈடுபடும். முக்கியமாக சுழற் பந்துவீச்சு படுமோசமாக திரும்பும். ஒருநாள், டி-20 ஆட்டங்களிலேயே இந்திய மண்ணின் சுழற்பந்துவீச்சுக்கு உலக நாடுகள் கடுமையாக திணறும். அதாவது எப்பொழுது சுழற்பந்து வீச்சிற்கு பதிலாக வேகத்தை கொண்டு வருவார்கள் என பேட்டர்கள் ஏக்கம் கொள்வார்கள். மேற்கூறப்பட்ட அனை த்து விஷயங்களும் மற்ற நாடுகளுக்கு மட்டுமின்றி இந்திய அணி வீரர்க ளுக்கும் சார்ந்ததாக தான் உள்ளது. அதாவது இந்திய அணி வீரர்களும் சொந்த பிட்சில் திணறுவார்கள் என்று கூறும் அளவிற்கு கிரிக்கெட் உலகில் இந்திய பிட்ச் தனக்கென்று தனி அடை யாளத்தை பெற்றுள்ளது.
ஆனால் இந்த அடையாளத்தை இங்கிலாந்து அணி அறிந்தும் “பாஸ் பால்” அணுகுமுறையை கையிலெடுத்து பலத்த அடி வாங்கியுள்ளது. இந்திய மண்ணில் 50 ஓவர்களை கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர்களை கொண்ட டி-20 போட்டிகளில் மிதவேகம் மற்றும் சுழற்பந்துவீச்சை எல்லா நேரங்களிலும் அதிரடியாக விளையாட முடியாது என்ற நிலையில், 450 ஓவர்களை கொண்ட போட்டியில் பந்துவீச்சின் ஆதிக்கம் அதிக மாக இருக்கும் சூழலில் அதிரடியை கையாள்வது மிகவும் அபாயகரமானது ஆகும். இதனை புரிந்து கொள்ளாமல் முதல் டெஸ்ட் போட்டியில் அதிர்ஷ்ட வெற்றியையும், 2-ஆவது டெஸ்ட் போட்டியில் பலத்த அடியையும் வாங்கி யுள்ளது.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. இந்த 3 ஆட்டங்களிலும் “பாஸ் பால்” அணுகுமுறையா? இல்லை சாதாரண அணுகுமுறையா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஒருநாள், டி-20இல் சாதகத்தை ஏற்படுத்தும்
இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் “பாஸ் பால்” அணுகுமுறையை கையிலெடுப்பது அபாயகரமானது என்று தெரிந்தும், அதனை இங்கிலாந்து அணி தேர்ந்தெடுத்து விளையாடுவது மிக தைரியமான செயலாகும். டெஸ்ட் போட்டியில் “பாஸ் பால்” அணுகுமுறை வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி-20 ஆட்டங்களில் அந்த அணிக்கு அனைத்து இடங்களிலும் கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும். அதாவது அனுபவத்தினால் முரட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.