கிரிக்கெட் உலகக்கோப்பை பாடல் வெளியானது
13-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் அக்டோபர் 5 அன்று இந்தியாவில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏறக்குறைய நிறைவு பெற்ற நிலையில், உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக “தீம் பாடல் (THEME SONGS)” ஒன்றை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதனன்று வெளியிட்டது. “தில் ஜாஷ்ன் போலே” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சஹாலின் மனைவியும், நடிகையுமான தனஸ்ரீ வர்மா பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
ஆசிய விளையாட்டில் சலசலப்பு
இந்திய தேசிய கொடியை அசைக்கக் கூடாது என கூறப்பட்டதா?
19-வது சீசன் ஆசியக்கோப்பை தொடர் சீனாவின் ஹாங்ஜு நகரில் செப்., 23 அன்று தொடங்கு கிறது. கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பெரிய விளையாட்டுகள் முன்கூட்டி யே தொடங்கியுள்ள நிலையில், கால்பந்து பிரிவில் இந்தியா - சீனா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில், இந்திய அணியை 5-1 என்ற கோல் கணக்கில் சீனா புரட்டியெடுத்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கோலடித்த (ராகுல்) பொழுது இந்திய ரசிகர் ஒருவர் தலைக்கு மேலே தேசிய கொடியை பிடித்து “இந்தியா”, “இந்தியா” என்று ஆரவாரம் செய்தார். ஆனால் மைதான உதவியாளர் ஒருவர் இவ்வாறு செய்யக்கூடாது எனக் கூறி இருக்கையில் அமரச்சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இது விதிமீறல் ரசிகர் ஒருவர் மைதானத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஆபாச வார்த்தைகள் பேசுதல், பாலியல் தொடர்பான நிகழ்வுகளை செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால் மை தான அதிகாரிகள் அவரை வெளி யேற்றலாம். ஆனால் ஒழுக்கத்துடன் ரசிகர் ஒருவரின் கொண்டாட்ட விஷ யத்தில் அதிகாரி தலையிடமுடியாது. இந்திய ரசிகர் தனது தாய்நாட்டின் தேசிய கொடியை மட்டுமே பிடித்து, தாய் நாட்டின் பெயரை மட்டுமே கூறினார். இதில் தவறு எதுவும் இல்லை.
கம்பீருக்கு தோனி மேல் திடீரென பாசம் ஏன்?
இந்திய கிரிக்கெட் முன்னாள் தொடக்க வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் 41 வயதை கடந்துவிட்டாலும், பழைய சம்பவங் களை மறக்காமல் பள்ளிச் சிறுவர் களை போல பழிவாங்கும் நோக்கத்து டன் இன்னமும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இவருக்கு 2 பேரை கண்டால் ஆகவே ஆகாது. ஒருவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, மற்றொருவர் 2011இல் உலகக் கோப்பை பெற்றுத் தந்த தோனி. இரு வரையும் அடிக்கடி விமர்சிப்பார். தோனியுடன் நேருக்கு நேர் சண்டை போட்டது இல்லையென்றாலும், கோலி யுடனான 10 ஆண்டு பகையை நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் தீர்த்துக் கொள்ளப்போவதாக அவரிடம் மோதி ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். கோலி உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய ரசிகர்கள் கம்பீர் செல்லும் இடமெல்லாம் கோலி, தோனி என கூச்சல் போட்டு வம்புக்கு இழுக் கின்றனர். இதற்கு பதிலடி என்ற பெயரில் கம்பீர் ஆபாச சைகை காட்டும் கேவலமான விஷயங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 வார கால மாக தோனியை கம்பீர் புகழ்ந்து வரு கிறார். என்ன காரணம் என்று தெரிய வில்லை. ஆதாயம் இல்லாத பாராட்டு, பாசம் கம்பீரிடம் இருந்து வந்தது இல்லை என்பது கிரிக்கெட் உலகிற்கு நன்கு தெரியும் என்பதால், கம்பீருக்கு தோனி மேல் திடீர் பாசம் எந்த திசை நோக்கி பயணிக்கிறது என்று இன்னும் கொஞ்சம் நாட்களில் வெளிப்படை யாக தெரியவரும் என்பது குறிப்பிடத் தக்கது.
குழுமோதலை உருவாக்கும் விளையாட்டுகள்
விளையாட்டு உலகில் சண்டை, சச்சரவு சகஜமானது. தனிநபர் போட்டிகளாக இருந்தாலும் சரி, குழு போட்டிகளாக இருந்தாலும் சரி வீரர் - வீராங்கனை களுக்கு இடையே மோதல் அரங்கேறுவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் கால்பந்து, ரக்பி, பேஸ்பால், கூடைப்பந்து ஆகிய 4 விளையாட்டுகளில் சண்டை என்றால் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். ரசிகர்கள் கூட மோதிக்கொள்வார்கள். மைதானங்கள் தீ வைப்பு சம்பவங்கள் கூட அரங்கேறியுள்ளன. இதற்கு காரணம் குழுமோதல்தான். உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டை எதிர்கொண்டால், வீரர் - வீராங்கனைகளுக்கு சண்டை என்றால் இரு அணிகளைச் சேர்ந்த 2 பேர் மோதுவார்கள். அதிகபட்சமாக 4 பேர் மோதிக்கொள்வார்கள். அவ்வளவுதான். ஆனால் கால்பந்து, ரக்பி, பேஸ்பால், கூடைப்பந்து விளையாட்டுகளில் இரு அணிகளும் மோதிக்கொள்வார்கள். இதில் பேஸ்பால், ரக்பி விளையாட்டுகள் படுமோசமானது. சிறிய சண்டை என்றால் கூட அணியில் உள்ள 100 பேரும் எதிரணியுடன் மோத தயாராகுவார்கள். இதனால் பேஸ்பால், ரக்பி போட்டிகளில் பாதுகாப்புப்படை வீரர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.