games

img

ஏப்., மாத இறுதியில் அரையிறுதி ஆட்டங்கள் தொடக்கம்

உலகின் முதன்மையான கிளப் கால்பந்து தொடரான ஐரோப் பிய கால்பந்து லீக் (சாம்பியன்ஸ் லீக்)  தொடரின் நடப்பு ஆண்டுக்கான சீசன்  தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வில்லர்ரியல் (ஸ்பெயின்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), லிவர்பூல் (பிரிட்டன்), மான்செஸ்டர் சிட்டி(பிரிட்டன்) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இம்மாத இறுதியில் (ஏப்ரல் 27-ஆம் தேதி) அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. அரையிறுதி ஆட்டங் கள் லெக் 1, லெக் 2 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு லெக்கி லும் விளையாடி வெற்றி, தோல்வி மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும். அரையிறுதி மோதல்  வில்லர்ரியல் (ஸ்பெயின்) -  லிவர்பூல் (பிரிட்டன்) ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) -  மான்செஸ்டர் சிட்டி (பிரிட்டன்)