games

img

“டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடியதுதான் மோசமானது” – கங்குலி  

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பார்த்த வரையில் இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில் விளையாடியதுதான் மோசமானது என நினைக்கிறேன் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.  

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்12 சுற்றோடு வெளியேறியது. கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பார்த்த வரையில் இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில் விளையாடியதுதான் மோசமானது என நினைக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2017, 2019 ஆம் ஆண்டுகளில் அதாவது சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாகத்தான் செயல்பட்டது. ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.  நான் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பார்த்தவரையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடியதுதான் மோசமானது என நினைக்கிறேன். என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. சில நேரங்களில் பெரிய போட்டித் தொடரில் இதுபோன்று நடக்கலாம். நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த ஆட்டங்களில் இந்த சூழலைப் பார்த்தேன். இந்திய அணியினர் அவர்களின் திறமையில் 15 சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்தி விளையாடினர் என்று அவர் தெரிவித்தார். 

;