16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்ற நிலையில், இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா - இலங்கை அணிகள் தகுதி பெற்றன. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணிக்கு இது 8-வது (ஒருநாள் - டி-20 சேர்த்து) ஆசியக் கோப்பையாகும்.