games

img

விளையாட்டு செய்திகள்

கோப்பை வென்றாலும், வெல்லாவிட்டாலும் ரூ.400 கோடி வருமானம் கிடைக்கிறது
பிறகு ஏன் வீரர்களை அணி உரிமையாளர்கள் தொல்லை செய்கிறீர்கள்?
லக்னோ சஞ்சீவ் கோயங்காவை வறுத்தெடுத்த சேவாக்

ஐபிஎல் தொடரின் 57ஆவது  லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - லக்னோ அணிகள் மோதின. இந்த  ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சா லும், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடியின் மிரட்டலான பேட்டிங் காலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த படுதோல்வியால் கடுப்பான லக்னோ அணி உரிமையாள ரும், ஆர்பிஎஸ்ஜி குழும தலைவரு மான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணி யின் கேப்டனான கே.எல்.ராகுலை மைதானத்தின் பெவிலியன்  நுழைவு வாயிலில் வைத்து திட்டினார்.

ரசிகர்கள் கண்டனம்
இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுலை சாதாரண உள்ளூர் தொடருக்காக திட்டுவதா? என கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கே.எல்.ராகுலுக்கு ஆதர வாக ஹேஸ்டேக்குடன் களமிறங்கி னர். மேலும் தங்கள் அணிக்கு வாருங் கள் என சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக கள மிறங்கி சஞ்சீவ் கோயங்காவிற்கு கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரிக்பஸ் சேனலில் அவர் கூறுகை யில், “ஐபிஎல் அணியின் உரிமையாளர் கள் மைதானத்திற்கு சென்று வீரர்கள், அணி பயிற்சியாளர்களிடம் கோபப்படு வதை தவிர்க்க வேண்டும். அணி உரி மையாளரின் பங்கு என்னவென்றால்,  வீரர்களை ஊக்குவிக்கும் செயலை மட்டுமே செய்ய வேண்டும். ஆனால்  ஐபிஎல் உரிமையாளர் ஒருவர்,”என்ன நடக்கிறது? என்ன பிரச்சனை?” என நேரடியாக வீரர் ஒருவரிடம் கேட்கிறார். இது தவறானது. முக்கியமாக ஐபிஎல் உரிமையாளர்கள் வீரர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லது” எனக் கூறினார்.

வணிகர் - வருமானம் 
மேலும் சேவாக் கூறுகையில், “ஐபிஎல் உரிமையாளர்கள் அனை வரும் வணிகர்கள்தான். லாப நஷ்டத்தை மட்டுமே புரிந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள். மேலும் ஐபிஎல் விளையாட்டில் அணி உரிமையாளர்களுக்கு எந்தவொரு நஷ்டமும் இல்லை. என்ன நடந்தாலும் ரூ.400 கோடி லாபம் ஈட்டுகிறார்கள். அதனால் அணி உரிமையாளர்களின் பணி வீரர்களை ஊக்குவிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்” என  சஞ்சீவ் கோயங்காவை வறுத்தெடுத் தார்.  சேவாக்கின் இந்த அதிரடி பேச்சிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொளுத்திய வெயில் ; சென்னை ராஜஸ்தான் வீரர்கள் திணறல்

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது. சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றி யால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பாதையில் சென்னை அணி கம்பீரமாக மேல்நோக்கி நகர்ந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மதியம்  3:30 மணிக்கு தொடங்கியதால்,  வெயி லின் கொடுமையை தாக்குப்பிடிக்க முடியாமல் இரு அணி வீரர்கள் கடுமை யாக திணறினர். குறிப்பாக முதலாவதாக பீல்டிங் செய்ததால் சென்னை வீரர்கள் வெயிலின் தாக்கத்தால் விரைவிலேயே சோர்வடைந்து, பல்வேறு கேட்சுக்களை தவறவிட்டனர். 5 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் ராஜஸ்தான் வீரர்களும்  பீல்டிங்கில் சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்

தில்லி - லக்னோ
(64ஆவது ஆட்டம்)

நேரம் : இரவு 7:30 மணி
இடம் : தில்லி மைதானம் 
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

;