games

img

உலகக்கோப்பை தொடருக்கு “காஷ்மீர் எக்ஸ்பிரஸை” ஏன் தேர்வு செய்யவில்லை?

கிரிக்கெட் உலகில் “காஷ்மீர் எக்ஸ்பிரஸ்” என அழைக்கப் படும் உம்ரான் மாலிக் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடிக்காத நிலையில், வரவிருக்கும் டி-20  உலகக்கோப்பை தொடரில் இடம்  பிடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் உம்ரான் மாலிக்கை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. பார்ம் பிரச்சனையில் இருக்கும் பும்ரா, புவனேஸ்வர், சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலை யில், சூப்பர் பார்மில் இருக்கும் மிரட்டல் நாயகன் உம்ரான் மாலிக் கிற்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  உலகக்கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றா லும், மிரட்டல் வேகத்தில் பந்துவீசும் “டெத் பீஸரான” உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்படாதது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதக்குரல் எழுந்துள்ளது. டுவிட்டர் பக்கத்தில் #umranmalik என்ற ஹேஸ்டேக்குடன் தேர்வு செய்யாததற்கான கேள்வியும், உம்ரான் மாலிக்கின் அபார பந்துவீச்சு ஆகியவற்றை டிரெண்ட் செய்து வருகின்றனர். 

வேகம் தான் முக்கியம்

உயிரோட்டமுள்ள ஆஸ்திரேலிய மைதானங்களில் “சூப்பர் பாஸ்ட்” கலந்த பந்துவீச்சு மூலம் தான் எதிரணிகளை சமாளிக்க முடியும். ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள்  வேகப்பந்துவீச்சில் (பேட்டிங், பந்துவீச்சு) நன்றாக விளையாடக் கூடியவர்கள். முக்கியமாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கண்டிப்பாக ருத்ரதாண்டவம் ஆடக்கூடும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதில் பும்ரா மட்டுமே லேசான “சூப்பர் பாஸ்ட்” வேகத்தில் வீசுவார். மற்ற அனைவரும் சுமாராக, மிதமாக தான் வீசுவார்கள். நல்ல வேகத்தில் பந்து வீசும் தீபக் சாஹர் மாற்று வீரராகவும், 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் உம்ரானை வீட்டிலும் அமர வைப்பது சரியானது அல்ல. இதன் காரணமாக தான் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் விபரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார்,  தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (கீப்பர்), தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சஹால், அக்ஸர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். மாற்று வீரர்கள் : முகமது ஷமி, ஷ்ரே யஸ், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்

 

;