games

img

அர்ஜெண்டினாவில் உலகக்கோப்பை

36 ஆண்டுகளுக்கு பிறகு மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. கத்தாரில் கொண்டாட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், செவ்வாயன்று உலகக்கோப்பை அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றது. 

பியூனஸ் அயர்ஸ் விமானநிலையத்தில் உலகக்கோப்பையுடன் கேப்டன் லயோனல் மெஸ்ஸி - பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி

ஜியோ சினிமாவில் இறுதி ஆட்டத்தை 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர்

கத்தார் சீசன் உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 என்ற தொலைக்காட்சி சேனலும் (குறைந்த அளவு கட்டணம் மற்றும் சில கேபிள்களில் இலவசம்), ஜியோ சினிமா (இலவசம்) என்ற ஓடிடி தளமும் நேரடியாக ஒளிபரப்பியது. இந்தியாவில் உலகக்கோப்பை தொடரின் மொத்த ஆட்டங்களையும் ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18 சேனல் வழியாக 40 பில்லியன் நிமிடங்களுக்குப் பார்க்கப்பட்டிருப்பதாகவும், ஸ்போர்ட்ஸ் 18 சேனலில்  பார்த்த வர்களை விட, ஜியோ சினிமா செயலி வழியாகப் பார்த்தவர்கள் அதிகம் என அறி விப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய அளவிலான டிஜிட்டல் துறையில் புதிய வரலாறாக அமைத்துள்ள நிலையில்,  அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தை மட்டும் ஜியோ சினிமா செயலி வழியாக 3.2 கோடி (32 மில்லியன்) ரசிகர்கள் பார்த்துள்ளதாக அறிக்கையும் வெளியாகியுள்ளது.

அர்ஜெண்டினா கோல்கீப்பர் மார்டினெஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை?

கால்பந்து உலகக்கோப் பையை 36ஆண்டு களுக்கு பிறகு கைப்பற்றி வரலாறு படைத்த அர்ஜெண்டினா அணிக்கு உல கம் முழுவதும் பாராட்டு குவிந்து வரும் நிலையில், அந்த பாராட்டு செய்திக்கு சரிசமமாக ஒரே ஒரு  சம்பவத்தால்  சர்ச்சை கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சர்ச்சைக்கு  காரணம் அர்ஜெண்டினா கோல்கீப்பர் மார்டினெஸ்தான். கத்தார் சீசனில் தனது சிறப்பான, துடிப்பான ஆட்டத் தால் கோல்கீப்பருக்கான  “தங்க கையுறை” விருதை  வென்றார் மார்டி னெஸ். விருது வாங்கிய பின்னர் விழா மேடையிலேயே விருது கோப்பை யுடன் “ஆபாச சைகை” செய்கை மூலம் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.  அர்ஜெண்டினாவின் கோப்பை கொண்டாட்டம் காரணமாக சம்பவ இடத்தில்  மார்டினெஸ் விவகாரத்தை மைதானத்தில் யாரும் கொண்டுகொள்ளவில்லை. ஆனால்  போட்டி நிறைவு பெற்ற பின்பு அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்து செய்தியுடன், மார்ட்டினெஸ் “ஆபாச சைகை” விவ காரம் சேர்ந்து கண்டனச் செய்தியும் டிரெண்ட் ஆகியது.  போட்டியை நடத்திய கத்தார் அரசு, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (பிபா) இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அர்ஜெண்டினா அணி தனது நாட்டிற்கு சென்று, அனைத்து கொண்டாட்டங் களும் நிறைவு செய்த பின்பு  மார்ட்டினெஸை அழைத்து விசாரிக்க பிபா திட்டமிட்டுள்ளதாக செய்திகள்வெளியாகின.