games

img

கிளப் உலகக்கோப்பை கால்பந்து இறுதியில் ரியல் மாட்ரிட்

மொரோக்கோ நாட்டில் நடைபெற்று வரும் 19-வது சீசன் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியன்) - அல் அக்லி (எகிப்து - ஆப்பிரிக்க ரன்னர்) அணியை எதிர்கொண்டது. ஐரோப்பிய கிளப் அணிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியான ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 4-1 என்ற கோல் கணக்கில் அல் அக்லியை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இறுதிக்கு முன்னேறிய அல் ஹிலால் (சவூதி - ஆசிய சாம்பியன்) அணியை எதிர்கொள்கிறது.  முன்னதாக அரையிறுதியில் தோல்வி கண்ட  அல் அக்லி (ஆப்பிரிக்க ரன்னர்) - பிளமிங்கோ (பிரேசில் - தென் அமெரிக்கா) அணி3-வது இடத்திற்கான ஆட்டம் சனியன்று நடைபெறுகிறது.