games

img

2002ஆம் ஆண்டின் வரலாற்றை மீண்டும் உருவாக்குமா செனகல்

2002-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த செனகல் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பலமான நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்குகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் பலமுறை மிகச் சிறப்பாக விளையாடி மூன்று முறை இறுதிப் போட்டிகளில் கண்ணீரோடு கோப்பையை நழுவவிட்ட நெதர்லாந்து அணி, நடப்பு சீசனில் எதிர்ப்பு ஆட்டக்காரர் விரிஜின் வான்டிக் தலைமையிலான மிகவும் பலமாக களமிறங்குகிறது. 2002-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து உலகில் சுனாமியை உருவாக்கிய ஆப்பிரிக்க அணியான செனகல் அணி பிரான்ஸ், உருகுவே ஆகிய அணிகளை வீழ்த்தி காலிறுதி வரை முன்னேறி அசத்தியது.  நடப்பு சீசனில் 2002-ஆம் ஆண்டு மாதிரி சுனாமி எதுவும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செனகல் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸாடியோ மானே காயம் காரணமாக விளையாட இயலாமல் போனது அந்த அணிக்கு சிக்கலை உருவாகியுள்ளது.

செனகல் - நெதர்லாந்து (3-வது லீக்)
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : அல் துமாமா