முன்னேறுமா இந்தியா?
ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் 7-வது சீசன் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஞாயிறன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பலமான மலேசியா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் முதலிடத்துக்கு முன்னே
றும் (தோராயமாக) என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா - தென்கொரியா
நேரம் : மாலை 4:00 மணி
பாகிஸ்தான் - ஜப்பான்
நேரம் : 6:15 மணி
மலேசியா - இந்தியா
நேரம் : 8:30 மணி
டிக்கெட் எவ்வளவு?
தெற்கு - பிளாக் “ஏ” - ரூ.300
தெற்கு - பிளாக் “பி” - ரூ.300
கிழக்கு - பிளாக் “ஏ” - ரூ.400
கிழக்கு - பிளாக் “பி” - ரூ.400
கலைஞர் பெவிலியன் - ரூ.500
டிக்கெட் பாக்ஸ் கவுண்டர் மற்றும்
ஆன்லைனில் விற்பனை செய்
யப்படுகிறது.
கவுண்டர்களில் : காலை 11
மணி முதல் மாலை 6 மணி வரை
வாங்கலாம்.
ஆன்லைனில் : https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian-Champions-Trophy-2023 லிங்க் மூலம் பெறலாம்.
தமிழ்நாட்டில்... பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம்...
பாகிஸ்தான் ஹாக்கி முகமது சாக்லைன் நெகிழ்ச்சி
“சென்னை மக்கள் பேரன்பு மிக்கவர்களாக உள்ளனர். நாங்கள் (பாகிஸ்தான் ஹாக்கி அணி) அனைவரும் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம். இங்கே உணவுகள் சிறப்பாக இருக்கின்றன. மட்டன் பிரியாணியை பார்த்தவுடன் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் சந்தோஷமாகி விட்டார்கள்” என ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடருக்காக சென்னை வந்துள்ள பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் முகமது சாக்லைன், தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள் மற்றும் சென்னை மக்களின் அன்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023
கோல் மழையுடன் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் மகளிர் 9-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்பொழுது
நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், சனியன்று நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கின.முதல் நாக் அவுட் சுற்று
ஆட்டத்தில் ஸ்பெயின் நாடு, சுவிட்சர்லாந்து நாட்டை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் 5-1 என்ற கோல் மழையுடன் சுவிட்சர்லாந்து அணியை புரட்டியெடுத்து முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.
சாம்பியன் நார்வே அவுட்
மற்றொரு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் நாடு நார்வே நாட்டை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. நார்வே அணி 1995 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்
நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்கா
நேரம் : காலை 7:30 மணி
இடம் : அலியானாஜ் மைதானம், சிட்னி (ஆஸி.,)
ஸ்வீடன் - அமெரிக்கா
நேரம் : மதியம் 2:30 மணி
இடம் : ரெக்டாங்குலர் மைதானம், மேல்போர்ன் (ஆஸி.,)