games

img

புரோ கபடி 2024

புரோ கபடி தொடரில் முன்னாள் சாம்பியன் அணியான (2019) பெங்கால் அணி நடப்பு சீசனில் வெற்றிப் படிகளில் காலடி வைக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது. மணிந்தர் சிங், ஸ்ரீகாந்த் ஜாதவ், அக்சய் பரத் என நட்சத்திர வீரர்கள் பட்டாளம் இருந்தா லும் பெங்கால் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி வெறும் 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றியை ருசித்து, புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்தில் உள்ளது.  தொடக்கம் முதலே நன்றாக விளை யாடினாலும் இறுதிக்கட்ட சொதப்பலால் பெங்கால் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. கபடி விளையாட்டில் இறுதிக்கட்ட நிலைமை எப்படி வேண்டு மானாலும் மாறலாம் என்பதை பெங்கால் அணி சிந்திக்காமல் இருப்பது நடப்பு சீசனில் அடிமேல் அடி வாங்கி வருகிறது. பெங்கால் அணியைப் போல மற் றொரு நட்சத்திர அணியான பிரதீப் நார்வல் விளையாடி வரும் உத்தரப்பிர தேசம் அணியும் இறுதிக் கட்ட சொதப் பலால் வெற்றியை கோட்டைவிட்டு புள்ளிப்பட்டியலில் (10-ஆவது இடத்தில்) பின்தங்கி உள்ளது.

இன்றுடன் மும்பையில் லீக் ஆட்டங்கள் நிறைவு
கடந்த ஒருவார காலமாக புரோ கபடி தொடரின் 6-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா தலை நகர் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில்,  66- ஆவது லீக் ஆட்டத்துடன் 6-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து 7-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடை பெற உள்ளது.