நார்வே செஸ் தொடர்
உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா
ஐரோப்பா நாடான நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கிளாசிக்கல் பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா தனது 3ஆவது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை (நார்வே) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி யுள்ளார். காய்களை நகர்த்த போதுமான அவகாசம் கிடைக்கும் கிளாசிக்கல் பிரிவில் முதன்முறையாக தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். பிரக்ஞானந்தாவிடம் வீழ்ந்த கார்ல்சன் 3 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
வைஷாலியும் முதலிடம்
நார்வே செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பிரக்ஞானந்தாவைப் போலவே வைஷாலியும் மூன்று சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள், மணல், களிமண், செங்கல் தூள் களிமண் ஆடுகளத்தின் சுவாரஸ்யம்
உலகில் பிரசித்தி பெற்றது கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடராகும். காரணம் பிரம் மாண்ட பரிசுத்தொகை, சிறப்பு ஏற்பாடு கள் காரணமாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு விளையாட்டு உலகில் மவுசு அதிகம். டென்னிஸ் உல கில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரெஞ்சு, விம்பிள்டன் என 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் உள்ளன. இதில் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் இயற்கையான புல் தரையிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா செயற்கை புல் தரை யிலும், பிரெஞ்சு களிமண் தரை யிலும் நடத்தப்படுகிறது. மற்ற 3 ஆடு களங்களை விட பிரெஞ்சு ஓபன் களி மண் தரையில் விளையாடுவது சற்று சிரமமான காரியம் என்ற நிலையில், அந்த ஆடுகளத்தின் தன்மையை பற்றி பார்க்கலாம்:
களிமண் ஆடுகளம் முழுவதும் களி மண்ணால் ஆன பிட்ச் பகுதியை கொண்டிருக்காது. கள், மணல், களி மண், செங்கல் தூள் உள்ளிட்டவை களை கொண்டு மைதான பிட்ச் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது மைதான பிட்சின் அடிப்பகுதியில் முத லில் சாதாரண மண் பரப்பப்படும். அதன் பிறகு கடினமான பெரிதான பாறா ங்கல் துண்டுகள் போடப்படும். மண் - பாறாங்கல் அடுக்கை ரோடு ரோலர் வண்டியை வைத்து கடினமாக இறுக்கப்படும். அதன்மேல் சாதாரண ஒரு வகை ஜல்லித் துகள், அதற்கு மேல் ஒருவித வெள்ளை மணலையும் (கடல் மணல்) சேர்த்து ரோடு ரோலர் வண்டி மூலம் நன்றாக இறுக்கி, கடைசி யாக செங்கல் தூள் தூவப்படும். இதுதான் களிமண் ஆடுகளம் ஆகும்.