games

img

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023

45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.  அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வில்வித்தையில் இந்தியாவிற்கு தங்கம்

கலப்பு இரட்டையர் 50 மீ வில்வித்தை பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்  கொரியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் களமிறங்கிய ஓஜாஸ் பிரவீன் - ஜோதி சுரேகா ஜோடி முதல் 2 செட்டில் அபாரமாக விளையாடி 80  புள்ளிகளை குவித்தது. ஆனால் 3-வது செட்டில் இந்தியா (39 புள்ளிகள்) சொதப்ப, சுதாரித்த தென் கொரிய சோ - ஜு ஜோடி 3-வது செட்டில் 40  புள்ளிகளை குவித்தது.  இதனால் இருநாடுகளும் 119 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தது. வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இந்தியா ஜோடிகள் ஆதிக்கம் செலுத்தி 40 புள்ளிகள் குவிக்க தென் கொரிய ஜோடி 39 புள்ளி களை குவித்தது. இதன்மூலம் இந்தி யாவின் ஓஜாஸ் பிரவீன் - ஜோதி சுரேகா ஜோடி 159 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. 158 புள்ளிகளு டன் தென் கொரியாவின் சோ - ஜு ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.  வில்வித்தை உலக அரங்கில் தென் கொரியா மிகவும் பலமான அணி என்ற நிலையில், தென் கொரியாவை எளி தாக வீழ்த்தி ஆசிய விளையாட்டில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருப் பது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

லவ்லினாவுக்கு வெள்ளி

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 75 கி பிரிவில் இறுதிக்கு முன்னேறினார். புதனன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ குயானை எதிர்கொண்ட லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனாவின் லீ குயான் தங்கப்பதக்கம் வென்றார்.

நடைபோட்டியில் வெண்கலம்

கலப்பு இரட்டையர் 35 கிமீ நடைப்போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி, ராம் பபூ ஜோடி 5:51:14 மணிநேரத்தில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கம் வென்றது. சீன ஜோடி (5:16:41 மணிநேரம்) தங்கப்பதக்கமும், ஜப்பான் ஜோடி (5:22:11 மணிநேரம்) வெள்ளிப்பதக்கமும் வென்றது. 

பர்வீனுக்கு வெண்கலம்

மகளிர் 57 கி எடைப்பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பர்வீன், சீன தைபேவின் லின்-னை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன தைபேவின் லின் 5-0 என்ற கணக்கில் பர்வீனை வீழ்த்தி இறுதிக்கு முன்னேற, பர்வீன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

பதக்கப் பட்டியல்

    தங்கம்      வெள்ளி      வெண்கலம்    மொத்தம்
1.சீனா    167    92    47    306
2.ஜப்பான்    35    50    53    138
3.தென்கொரியா    33    44    67    144
4.இந்தியா    16    27    31    74