games

img

விளையாட்டு செய்திகள்

டாக்கா
எம்.பி., ஆனார் ஷாகிப் அல் ஹாசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், கிரிக்கெட் உலகின் முன்னணி ஆல்ரவுண்ட ருமான ஷாகிப் அல் ஹாசன் நடந்து முடிந்த அந்நாட்டு பொதுத் தேர்தலில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் அவாமி  லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட ஷாகிப் அல் ஹாசன் எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தாததால் எவ்வித எதிர்ப்பின்றி வெற்றி பெற்று முதல்முறையாக வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவுள்ளார். வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால் ஆளும் அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
பழுதடைந்த மைதானத்தில் புரோ கபடி
அடிக்கடி சரிசெய்யும் அவலம்

குறுகிய காலத்தில் பிரபல மடைந்த புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசனின் 6-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 கட்ட லீக் ஆட்டங் களும் பிரச்சனையின்றி நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் நடை பெற்று வரும் 6-ஆம் கட்ட லீக் ஆட்டத்திற்கு மட்டும் மைதானம் மூலம் பல்வேறு இடைஞ்சல்கள் அரங்கேறி வருகின்றன. அதாவது மைதான பிட்ச் பகுதி தொடர்ந்து பழுதாகி வரும் (பெயர்ந்து வருகிறது) சூழலில், புரோ கபடி அமைப்பாளர்கள் அடிக்கடி போட்டியை நிறுத்தி பழுதை சரி செய்கின்றனர். 

இதனால் 40 நிமிடமும் பரபரப்பாக நடைபெறும் புரோ கபடி ஆட்டத்திற்கு இந்த மைதான பழுது விவகாரம் கடும் குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது.  மும்பை மைதானத்தில் இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே இருப்பதால் சர்தார் வல்லபாய் மைதான நிர்வாகம் மேற்கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் 5 நாட்களில்...
ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் 
ரூ.719கோடி பரிசுத்தொகை

2024-ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 112-ஆவது சீசன் அந்நாட்டின் முக்கிய நகரான மெல்போர்னில் ஜனவரி 14 அன்று தொடங்குகிறது.  இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஞாயிறன்று துவங்கிய நிலையில், கடந்த சீசனை விட நடப்பு சீசனில் 12% அதிகமான அளவில் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடரின்  மொத்த பரிசுத்தொகை ரூ.719 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக வீரர் - வீராங்கனைகளுக்கு சிறப்பு பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.