facebook-round

img

வள்ளுவரை இழிவுபடுத்துகிறார் எச் ராஜா.

குறளும் கீதையும் ஒன்று என்று வள்ளுவரை இழிவுபடுத்தியிருக்கிறார் எச் ராஜா.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்பதும் ஒன்றாம்!
மனிதர்கள் மத்தியில் வேறுபாடுகள் உண்டு என்பதை வள்ளுவர் மறுக்கவில்லை. ஆனால்
அவை செய்யும் தொழிலின் காரணமாக வருவதே தவிர பிறப்பால் அல்ல என்று தெளிவாக
சொன்னார். கீதையோ நால் வருணம் என்று , பிராமண, ஷத்திரிய வைசிய, சூத்ர என்று
பிரித்தது கடவுளே என்கிறது. அது குணத்தின் அடிப்படையில் என்று இங்கே கூறிய
கீதை இன்னாரு இடத்தில் பெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் "பாப யோனிய"
என்கிறது. அவர்கள் பாப யோனியில் பிறந்தவர்கள் என்று பிறப்பின் அடிப்படையில்
பேதம் செய்கிறது. குணத்தின் அடிப்படையில்தான் வருணங்கள் என்கிறாரே அப்படித்தான்
அதே மகாபாரதத்தில் ஏகலைவனும் கர்ணனும் நடத்தப்பட்டார்களா? அது சரி, இப்போதாவது
குணத்தின் அடிப்படையில் பிரிக்கத் தயாரா எச் ராஜா? அதற்காக சாதிகளைக் கலைத்து விட்டு முதலிலிருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கத் தயாரா?

-Ramalingam Kathiresan