facebook-round

img

ஆண்குழந்தை பொம்பள புள்ளைகளுக்கு நாப்கின் எடுத்துட்டுப் போய்க் கொடுப்பதா...?

Miss....girlsங்களுக்கு நாப்கின் வேணுமாம்...எடுத்துக்கிறேன்."

"எடுத்துக்கோங்கமா"...

என்னடா இது ஓர் ஆண்குழந்தை பொம்பள புள்ளைகளுக்கு நாப்கின் எடுத்துட்டுப் போய்க் கொடுப்பதா/ கொடுக்கிறானே / கொடுக்கிறானா? போன்ற வார்த்தைமாற்றக் கேள்விகள் அறி வினாவாகவும், அறியா வினாவாகவும், ஐய வினாவாகவும் உங்களுக்குள் வரலாம். ஆனால் விடை என்னவோ உற்றது உரைத்தல் தான்.
எல்லா பாகுபாடுகளில்ம் முதல் பாகுபாடு பாலினப்பாகுபாடுதான்.இந்தப் பாகுபாட்டால் எழும் சிக்கல்கள் அடிமைத்தனத்தை வேரூன்ற செய்து,ஆதிக்கத்தை மேலோங்கச் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. குடும்பங்கள் முதல் குழு அமைப்பு வரை இது நீடித்துக்கொண்டே இருக்கிறது.
சகமனிதர்கள்,சக உயிர்,சக தோழர்கள்,எதிரிலிருப்பவர்களுக்கும் உணர்வுகளுண்டு என்பன போன்ற சில உண்மைகளை அப்பட்டமாக உடைக்கும் வழிமுறைகளை,வகுப்பறையில் தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலம் வள(லு)ப்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் ஒன்றுதான் இந்த மாதவிடாய் குறித்தப் புரிந்துணர்தல். ஆண்களைச் சுற்றி அம்மா,பாட்டி,
சகோதரி, மனைவி, மகள் என ஒவ்வோர் உறவும் உடன் பயணிக்கவே செய்யப்போகிறது. அவர்களைக் காணும் கண்ணோட்டத்தின் படிநிலையாக, சக வயதில் வகுப்பில் தன்னுடன் பயணிக்கும் பெண் குழந்தைகளைக் காணும் கண்ணோட்டம் அமையப்பெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு நகர்வும் இங்கே கட்டமைக்கப்படுகிறது.
இரண்டாம்நிலை வளர்ச்சிக் குறித்து விரிவாகக் கலந்துரையாடினாலே போதும்.ஒழுக்கம் என்பது எதன்மீது இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துவிடலாம். ஆனால் ஆசிரியர் சமூகங்கள் #பாலியல்கல்வி என்பதைக் கெட்டவார்த்தையாகப் பார்த்து ஒதுக்கிவிடுவதால் இங்கே பெண்பிஞ்சுகள் முதல் பெரிய பெண்கள் வரை பாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களே! நீங்கள் நாப்கினை மறைத்து மறைத்து எடுத்துச்செல்லவேண்டிய அவசியமில்லை! ஏனெனில் உங்கள் வீட்டு டிவி பெட்டியும் அதை வெட்டவெளிச்சமாகவே காட்டுகிறது!

#சக்திவேல்_ஆண்_குழந்தையல்ல!
#மனிதம்!

;