facebook-round

img

கம்யூனிஸ்டுகளை பெருமிதம் கொள்ள வைக்கும் வரலாற்று உண்மை

இன்று மேரி கியூரி ரேடியம் என்ற மூலகத்தைக் கண்டுபிடித்த நாள்...

மேரி கியூரி போலந்து நாட்டில் பிறந்தவர்.

பிரான்சில் குடியேறியவர்..

அவர்  பௌதீக விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்கிற்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி..

அவரது கணவர் சாலை விபத்தில்  இறந்த பின்பு பிரான்ஸ்  பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் அவரே.

பல ஆண்டுகளுக்கு பின்பு அவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட பின்பு நோபல் பரிசை 2 முறை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்...

அவர் வெளிப்படையாகவே கம்யூனிஸ்ட் ஆதரவாளராக இருந்தார்.

பெண் என்பதால் அவர் பங்களிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூட மறுத்த ஆணாதிக்க நோபல் கமிட்டி முடிவில் அவருடைய சாதனைகளை புறந்தள்ள முடியாததால் பெண்களையும் நோபல் பரிசுக்கு பரிசீலிப்பது என்று கொள்கை முடிவெடுக்க வைத்தவர்.

முதல் உலக யுத்தத்தின் போது (1016-20) காயமுற்ற நேசநாட்டு சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்க ரேடியத்தை முதன்முறையாக பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிரை காப்பாற்றிதற்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய ராணுவ விருதைப் பெற்றவர்.

( எல்லைப் பக்கமே போக பயந்த மோடிக்கு டிரம்ப் வெள்ளை மாளிகையை காலி பண்ணும் போது மிச்சம் இருந்த அமெரிக்காவின் உயரிய ராணுவ விருதை வழங்கியதோடு இதை ஒப்பிடாதீர்கள்)

ஏனெனில் மேரி கியூரி சொந்த செலவில் காயமுற்றோரை மருத்துவமனை கொண்டு வந்து சேர்க்க 20 ஆம்புலன்சுகளை வாங்கி இயக்கினார். 

அதில் ஒரு ஆம்புலன்ஸை போர்முனை வரை அவரே மரண பயமில்லாமல் ஓட்டி வந்தார்..

(70 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அறிமுகமான 108 ஆம்புலன்சின் முன்னோடி மேடம் கியூரி  அறிமுகப்படுத்திய ஆம்புலன்ஸ் சேவை என்றால் அது மிகையல்ல..)

மேடம்கியூரியின் மூத்த மகள் ஜுலியாட் கியூரியும் வேதியல் பங்களிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்..

அவரும் சூஎன்லாய்,  ஹோசிமின் போல பிரான்ஸ் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினராக இருந்து எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

பெண்கள் கல்விக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது

அவரும் அவரது தாயாரைப் போல நாசிப்படைகளுக்கு எதிராக போர்முனை வரை சென்று சிகிச்சை அளித்தார்.

ஒரே குடும்பத்தில் இருவர் நோபல் பரிசு பெற்ற முதல் குடும்பம் என்று புகழ் பெற்ற தாயும் மகளுமே அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ரேடியத்தின் தாக்கத்தினாலே கொல்லப்பட்டார்கள் என்றாலும் கோடான கோடி புற்றுநோய் நோயாளிகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய மகத்தான இடதுசாரி செயல்பாட்டாளர்கள் என்பது கம்யூனிஸ்டுகளை பெருமிதம் கொள்ள வைக்கும் வரலாற்று உண்மை.
சி.ஞானபாரதி
 

;