facebook-round

img

நான் ஏன் திரும்பி வந்தேன் -அனுராக் காஷ்யப்

நான் ஏன் திரும்பி வந்தேன்
நிதி ரஸ்தான்: தீபிகா பதுகோன் நேற்று ஜேன்யூ மாணவர்களை சந்தித்திருக்கிறார். நீங்கள் வெளிப் படையாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் ஷாரூக் கான் போன்றவர்கள் அமைதி காக்கிறார்கள்?

அனுராக் கஷ்யப்: இது அவரவர் எடுக்க வேண்டிய தனிப்பட்ட முடிவு. அவர்கள் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று நான் வற்புறுத்த முடியாது. ஆனால் ஒவ்வொருவரின் பொறுமைக்கும் ஒரு வாசற்படி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதைத் தாண்டி வருவார்கள்.
நான் முன்பு மோடி அரசை எதிர்த்துப் பேசியபோது சமூக வலைத் தளங்களில் என் மீது தாக்குதல் நடந்தது. என்னுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்வோம் என்று மிரட்டினார்கள். என்னுடைய நிலைப் பாட்டினால் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். நாட்டை விட்டு வெளியே சென்றேன். என்னுடைய அடுத்த படத்தின் காட்சிகளை இந்தியாவிலேயே எடுத்திருக்க முடியும். நான் லண்டனில் எடுத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் இங்கு நடக்கும் போராட்டங்களைப் பார்த்து மறுபடியும் திரும்பி வந்து விட்டேன்.
ஒரு ஜனநாயகத்தில் எதிர்க் கருத்துக் கூறுவது இயல்பான செயலாக இருக்க வேண்டும். அது ஒரு வீரச் செயலாக இருக்கக் கூடாது. ஆனால் அப்படிப் பார்க்கும் சூழல்தான் இந்தியாவில் நிலவுகிறது.

-Vijayasankar Ramachandran

;