"எல்லைகளின் இருபுறத்திலும் ஏற்படும் மதக்கலவரங்கள் அடங்காமல் நீடித்தால்
அது இரு அரசுகளுக்கும் இடையிலான யுத்தமாக மாறிவிடும்.. யுத்தத்தினால் நமது சுதந்திரம் பாதிக்கப்படும்.."
தேசவிடுதலையின் போது மதப்பகைமைகளை கைவிடவும்,
மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் வெளியிடப்பட்ட அண்ணல்
மகாத்மாவின் வேண்டுகோள் இவை.
#ஆனால்..
"பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம் காந்திஜி யுத்தப் பிரகடனம்"..
பெரும் பணக்காரரான பிர்லாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு இப்படியாத்தான் செய்தியை
திரித்து வெளியிட்டது..
இந்துமகாசபை அமைப்பின்
விருப்பங்களை, காந்தியின்
வார்த்தைகளாக மாற்றி
ஊடகங்கள் தங்கள் சொந்தக்
கதைகளை எழுதிக் கொண்டன..
பெரும் முதலாளிகளின் ஊடகங்கள் செய்திகளினூடாக தங்களுக்கான
அரசியலையும் கட்டமைத்துக்
கொள்கின்றன.. விடுதலை காலத்தில்
இருந்து தொடரும் பேருண்மை இது.