facebook-round

img

அர்ச்சுனனின் சந்தேகமும் கிருஷ்ணனின் நிவர்த்தியும்

அர்ச்சுனன்: இவர்களை எப்படி கொல்வது? இவர்களும் நமது சகோதரர்கள் அல்லவா? 
கிருஷ்ணன்: அர்ச்சுனா, யுத்தம் நிலத்துக்கானது. அதை அடைய இவர்களை கொல்வதில் தவறேயில்லை.
அர்ச்சுனன்: சொந்தங்களைவிட நிலம் முக்கியமா கிருஷ்ணா?
கிருஷ்ணன்: நிச்சயமாக. ஒரு சென்ட் நிலமாவது வேண்டும் என்கிறார்கள் நம்மவர்கள். 
அர்ச்சுனன்: இவர்களை கொன்றுவிட்டால் இவர்களின் பெண்கள் அனாதைகளாகிப் போவார்களே?
கிருஷ்ணன்: அதுதான் வசதி. அப்போதுதான் அந்த பெண்களை அடைய முடியும் என்கிறார்கள்.
அர்ச்சுனன்: பாரத மாதா துடிதுடிக்க மாட்டாளா கிருஷ்ணா?
கிருஷ்ணன்: துடிக்க கூடாது. சதுர்வர்ணயம் மயா சிருஷ்டம். அதை ஏற்றவர்களே தனது 
பிள்ளைகள் என்பதை அவள் அறிவாள். அதை ஏற்காதவர்களை கொல்வதில் தப்பே இல்லை.
அர்ச்சுனன்: ஒருவேளை பாரத மாதா எதிர்த்தால்..?
கிருஷ்ணன்: அவளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வருண மாதாவை இருத்தி விடுவோம்.
அர்ச்சுனன்: ஆக நமக்கு வருணம்தான் முக்கியமே தவிர பாரதம் அல்ல.
கிருஷ்ணன்: அதில் என்ன சந்தேகம்? அந்த நிலமும் பெண்களும் வர்ணாஸ்ரமத்தை 
நிலைநிறுத்தவே. நீ தொடங்கு யுத்தத்தை.
(அர்ச்சுனன் தொடங்கியே விட்டான். அங்கே அழுகுரல் எழுந்தது. இங்கே ஒருவர் இந்த
இருவரையும் பரம பக்தியோடு துதித்தார்)

Ramalingam Kathiresan

;