facebook-round

img

அண்ணா மும்மொழியை ஏற்றாரா?- அருணன்

"மும்மொழி கொள்கையை அண்ணா ஏற்ற வேளை" என்று ஒரு செய்தி கட்டுரையை
தி இந்து வெளியிட்டுள்ளது. அதில் "பிற மாநிலங்களும் மும்மொழி கொள்கையை அமுல்
படுத்தினால் தமிழகமும் அமுல்படுத்த தயார்" என்றே அண்ணா 1967 ஏப்ரலில் கூறியதாக
உள்ளது. அன்று மட்டுமல்ல இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உண்மையான மும்
மொழி கொள்கை இல்லை. அங்கே தென்னிந்திய மொழி எதுவும் மூன்றாவது மொழியாக
சொல்லி தரப்படுவதில்லை. மாறாக மேலோட்டமான சமஸ்கிருதமே சொல்லித் தரப்படு
கிறது என்று யோகேந்திர யாதவ் இதே இந்துவிற்கு கூறியுள்ளார். (20-9-19) மும்மொழி
கொள்கை என்பது இந்தியை திணிப்பதற்கான மோசடி திட்டம் என்பதை உணர்ந்தே 1968
ஜனவரியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே எனும் இருமொழி கொள்கையை கொண்டு வந்தார்
அண்ணா. இதுவே சரியானது என்பதை காலம் நிரூபித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்க
ளும் ஆங்கிலம் கற்று தருவதால் அது நடைமுறையில் இணைப்பு மொழியாகிப் போனது.
இதில் தமிழர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்? இந்திக்காரர்கள் ஏன் தமிழ் படிக்க
வேண்டும்? விரும்புகிறவர்கள் மட்டும் அதை தனியாக படித்து கொள்ளலாம்

-Ramalingam Kathiresan