"தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள், அவர்க
ளுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை' என்று சப்பைகட்டு கட்டுவதை நிறுத்தங்கள்" என்று
பாத்திமா மாஜிதா இந்து தமிழில் எழுதியுள்ளார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது,
பாபர் மசூதியை சங் பரிவாரம் தகர்த்து தரைமட்டமாக்கியபோது, குஜராத்தில் முஸ்லிம்களை
குறிவைத்து சங் பரிவாரிகள் கொலைவெறித் தாண்டவம் ஆடியபோது, மாட்டுக்கறி உண்ணக்
கூடாது என்று அதே சங்பரிவாரிகள் முஸ்லிம்களை அடித்துக் கொன்றபோது இவர்களுக்கும்
இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று எத்தனை பேர் சொன்னார்கள்? அப்படி சப்பைகட்டு
கட்டாதீர்கள், 'இந்துக்கள் நாம் சுயபரிசீலிப்போம்' என்று எவர் எழுதினார்கள்? பயங்கரவாதத்தி
ற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது சப்பைக்கட்டு அல்ல, அதுவொரு உண்மை. ஏழை
களின் பெருமூச்சாகத்தான் மதங்கள் பிறந்தன. அதற்குள் ஆதிக்கவாதிகள் புகுந்துகொண்டு
காலந்தோறும் ஆட்டம் போடுகிறார்கள். இந்த உண்மையைக்கூட முஸ்லிம்கள் சொல்லக்
கூடாது என்று ஒரு முஸ்லிம் பெண்மணியை விட்டு எழுத வைக்கிறார்களே அதுதான் இந்து
மதவெறியர்களின் வெற்றி. எல்லா வகுப்புவாதங்களும் மோசம்தான். ஆனால் பெரும்பான்மை
வகுப்புவாதம் அரசியல் அதிகாரத்தை வெல்லக்கூடியது என்பது மட்டுமல்லாது, இப்படி
சிறுபான்மையோர் மீது சிந்தனை அதிகாரத்தையும் செலுத்தக்கூடியது.