பத்திரிக்கையில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன்..
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்.
முதல்வரின் ஒப்புதலை பெறாமல் அசாமில் முஸ்லீம்கள் நிலம் வாங்க முடியாது.
ஜார்கண்ட் வந்த யோகிக்கு புல்டோசர்கள் மூலம் வரவேற்பு.
எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற்றுத்தர இயலாது என பிரதமர் திட்டவட்டம்.
இந்தியா கூட்டணி வென்றால் விவசாயிகளின் நிலங்களை வக்ஃப் வாரியம் அபகரிக்கும் என அமீத்ஷா பேச்சு.
பொது சிவில் சட்டத்தை அமலாக்க வேண்டுமென மோகன் பகவத் விருப்பம்.
மதரசா பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என பாஜக சூளுரை..
செய்திகளின் அயர்ச்சியால் செய்தித்தாளை மூடிவைத்து வானொலியை இயக்கினேன்.
மன் கீ பாத்தில் அவர், "மதம் - ஜாதியை வைத்து சமூகத்தில் பிளவை உருவாக்க நினைக்கிறார்கள்" வேதனையை வெளிப்படுத்தி உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.
வானொலியை நிறுத்தி விட்டு தொலைக்காட்சியை போட்டேன்..
"பில்லா கருப்பா பயங்கரமா இருப்பான்.. ஆனா இவன் பயங்கரமா கருப்பா இருக்கான்டா" எனும் காமெடி ஓடிக்கொண்டிருந்தது..!!
- ஆர்.பத்ரி, சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர்