நிவர் புயல் குறித்து கவிதையொன்றை கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?” என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.