மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாதின் பிரிவுபசார விழாவில் பேசிய நீங்கள் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு கண்கலங்கினீர்கள்.
காஷ்மீரில் குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயங்கராவாதிகளின் தாக்குதலுக்குள்ளான போது மோடியை அழைத்த ஆசாத் போனில் பேசும் போதே அழுது விட்டார் என்று சொல்லி உணர்ச்சிவசப் பட்டீர்கள்.
பிப்ரவரி 28, 2002 அன்று ஆய்தமேந்திய சங் பரிவார பயங்கரவாதிகள் தான் குடியிருந்த குல்பர்க் சொசைட்டியைச் சூழ்ந்த நிலையில், காங்கிரஸ் எம் பி ஈசான் ஜாப்ரி உதவி கேட்டு போன் செய்தபோது நீங்கள் அழைப்பை ஏற்கவே இல்லை என்று கூறிய அவரது மனைவி ஸாகியா ஜாப்ரி இன்றும் தன் குற்றச்சாட்டிலிருந்து பின் வாங்கவில்லை.
விசாரணையின் போது ஜாப்ரி என்னை அழைக்கவே இல்லை என்று எழுத்து பூர்வமாக நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் உங்கள் மீது குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது.
குஜராத் டூரிஸ்டுகளைப் பற்றி ஆசாத் அழுததை நினைவுகூர்ந்து நீங்கள் ‘நா தழுதழுக்க கண்ணீர் சிந்திய போது’ குல்பர்க் சொசைட்டியில் தஞ்சமடைந்த முஸ்லிம்களைக் காப்பற்றுங்கள் எனக் கதறிய ஈசான் ஜாப்ரியின் குரல்தான் எனக்குக் கேட்டது.
-Vijayasankar Ramachandran