election2021

img

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி,  அமித்ஷா  பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரிக்கை....

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீதமுள்ள 4 கட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும்தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்,வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார்கள், தேர்தல் நடத்தை விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறுகிறார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் டெரீக் ஓ பிரையன், குணால் கோஷ் உள்ளிட்டோர் தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் புதனன்று மனு அளித்தனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி இருவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறியுள்ளனர். கடந்த 12-ம் தேதி கல்யாணி பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்துவா, நாமசூத்ரா சமூகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.இரு சமூகத்துக்கும் மம்தா பானர்ஜி ஏதும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மதரீதியான,சமூக ரீதியில் குறிப்பாக மத்துவா, நாமசூத்ரா சமூகத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேர்தல் நடத்தை விதிகளின்படியும் விதி மீறலாகும்.ஆதலால், மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்க இருக்கும் 4 கட்டத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருக்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.el

;