election2021

img

தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது..... தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாஜக ஆதரவாக இருந்ததாக ‘ஐபேக்’ நிறுவன முன்னாள் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, ஆங்கில ஊடகம் ஒன்றுக்குஅளித்துள்ள பேட்டியில் பிரசாந்த் கிஷோர் மேலும் கூறியிருப்பதாவது:மேற்குவங்கத் தேர்தல் முடிவுகள் தற்போது ஒரு சார்பாக வந்திருந்தாலும், உண்மையில் இது
கடும் போராட்டமே ஆகும். தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே பாஜக-வுக்கு ஆதரவாக இருந்தது. எங்கள் பிரச்சாரத்தைக் கடினமாக்கியது. ஆனாலும் மக்கள் கொடுக்க ஆசைப்பட்டதற்கு, அதிகமாகவே திரிணாமுல் பெற்றுள்ளது என்றுதான் கூறுவேன்.

‘வங்கத்தில் வெல்கிறோம்’ என்று மிகப் பெரிய பிரச்சார பீரங்கியை பாஜக கட்டவிழ்த்து விட்டது. அன்று பாஜக இரட்டை இலக்கத்தைக் கடந்து 100 இடங்களை வென்றால் தொழிலை விட்டு விடுகிறேன் என்று கூறினேன், இப்போது பாஜக 100 இடங்களை எடுக்கவில்லை. ஆனாலும், இப்போதும் கூட இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன். அது ஒரு பிரச்சனையல்ல!ஆனால், தேர்தலில் வெல்வதற்கு மோடியின் புகழ் ஒன்று மட்டுமே போதுமா? அனைத்துதேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று விட முடியுமா, என்றால் அது நடக்காது. இதனை பாஜக உணர்ந்துகொள்ள வேண்டும். வகுப்புவாத அரசியல் எதுவரை போக முடியும் என்பதற்கு மேற்கு வங்க மக்கள் கொடுத்த தீர்ப்பே பதில்.இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

;