election2021

img

பாரபட்சமாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு....

புதுக்கோட்டை:
அதிமுகவினரின் பணப் பட்டுவாடாவை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சியினர் வீடுகளைசோதனையிட்டு பிரச்சனையை திசை திருப்புகிறது எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவின் அராஜக ஆட்சிஇன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது. தமிழனின் மொழி உரிமையை,இட ஒதுக்கீட்டு உரிமையை, மனித உரிமையை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு உடந்தையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இருந்து வருகிறது. இழந்த உரிமையை மீட்டெடுக்க, விவசாயத்தை, தொழிலைப் பாதுகாக்க, வளப்படுத்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என தமிழக மக்கள்முடிவெடுத்துள்ளனர். அதிமுகவினர் எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் அவர்களால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, பிபிஐ போன்ற தன்னாட்சி பெற்றஎந்த அமைப்புகளையும் மோடி அரசு சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை. இதில் தேர்தல் ஆணையமும் அடக்கம்.

அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக அடித்தகொள்ளைப் பணத்தை தேர்தலுக்காக தண்ணீராக செலவழிக்கின்றனர். வாக்குகளை இரண்டாயிரம், ஐயாயிரம் எனவிலை பேசி வாங்குகின்றனர். அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் தப்பவிடும் தேர்தல் ஆணையம், திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீடுஉள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வீடுகளைபழிவாங்கும் நோக்கில் சோதனையிடுகிறது.அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கையும் களவுமாகபிடித்து ஒப்படைத்தால் கூட அவர்களைதேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை. பாரபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லை. இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் எம்.சின்னத்துரை வெற்றி பெற்றால் கந்தர்வகோட்டை தொகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவார்.

கடந்த 7 ஆண்டு கால மோடி தலைமையிலான பாஜக அரசில் எந்தவிததொழிற்சாலையும் கொண்டு வரப்படவில்லை. வேலை வாய்ப்புகளும் தரப்படவில்லை. மாறாக இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறித்துள்ளனர். நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள்ஒரு இடத்தைக்கூட தரமாட்டார்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன் உடனிருந்தார்.

;