election2021

img

தேர்தல் ஆணையர்களுடன் நிலோத்பல் பாசு சந்திப்பு....

புதுதில்லி:
கேரள மாநிலத்தில் காலியாகியிருக்கின்ற மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்திடாமல் தற்காலிகமாக தேர்தல் ஆணையம்  நிறுத்திவைத்திருப்பது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு, தேர்தல் ஆணையர்களைச் சந்தித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஊரில் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

கேரளாவில் காலியாகியுள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலைத் தேர்தல் ஆணையம் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிலோத்பல் பாசு, தேர்தல்ஆணையத்திற்குக் கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி இருந்தார்.இது தொடர்பாக தேர்தல் ஆணையர்களிடம் அவர் நேரில் பிரச்சனைகளை எழுப்பினார். அப்போது நிலோத்பல் பாசு, தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் ஒத்தி வைத்தால், அது தன்னுடைய நிலைப்பாட்டிற்கான காரணங்களை வெளிப்படையாகவே விளக்கிட வேண்டும் என்றும், இவ்வாறு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி அரசாங்கம் கேட்டுக்கொண்டிருந்தால் அதற்காக அது கூறும் காரணங்களையும் வெளியிட வேண்டும் என்றும் கோரினார்.நிலோத்பல் கூறிய பிரச்சனைகளை கவனத்துடன் பரிசீலிப்பதாக தேர்தல்  ஆணையர்கள் உறுதி அளித்துள்ளார்கள். (ந.நி.)

;