மேற்குவங்க ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இடது முன்னணி தலைமையிலான ஐக்கிய முன்னணி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பர்தமான் வடக்கு தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சந்திசரண் லேத்தை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் இடது முன்னணியின் தலைவரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிமன்பாசு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதுபோன்று அனைத்து தொகுதிகளிலும் ஏராளமான கிராம பொதுக்கூட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.