election2021

img

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல்... காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை....

கன்னியாகுமரி 
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரசின் வசந்தகுமார் கொரோனா தொற்றால் சமீபத்தில் காலமானார். அவரது மறைவுக்குப்பின் காலியானதாக அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி  நாடாளுமன்ற தொகுதிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் மகனும், நடிகருமான விஜய் வசந்த்- தும், கடந்த தேர்தலில் தோல்வி கண்ட பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் களமிறங்கினர்.  இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மதியம் 3 மணி நிலவரப்படி 1.04 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு வித்தியாசம் அதிகமாக இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 

வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகலாம் என்ற கனவுடன் களமிறங்கிய பொன் ராதாகிருஷ்ணனுக்கு தனது தந்தை பாணியில் தடுப்புக்கோட்டை அமைத்து தடுத்துள்ளார் விஜய் வசந்த்.   

எண்ணப்பட்ட வாக்குகள் விபரம் : (மதியம் 3 மணி) 

விஜய் வசந்த் (காங்கிரஸ்) : 3,71,246 

பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக ) : 2,67,179