election2021

img

கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் எம்.சின்னத்துரை வெற்றி...

புதுக்கோட்டை:
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.சின்னத்துரை போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெயபாரதியை விட 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

கந்தர்வகோட்டை தொகுதியில் மொத்த வாக்குகள் 2, 01,521. இதில் 1,56,077 வாக்குகள் பதிவாகின. இதில் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரை 69710 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார்.  அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி 56,989 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்திலும், அமமுக வெட்பாளர் லெனின் 12,840 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெமிலா 12,661 வாக்குகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றனர்.